Show all

என்தலைவி, எனக்குக் கிடைத்த உயிர்மையும் கடவுள்பேறும் ஆவாள்! இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை என்கிற புரிதல் வரிசையில்

இயக்கத்தின் மீது இயங்குவதும், இயக்கமின்மையின் மீது இயங்குவதும், முறையே தாறுமாறு இயக்கத்தையும், சீரான இயக்கத்தையும் தருகிறது என்கிற விரிவிற்கு உரிய, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்கிற கண்டுபிடிப்பின் தலைப்பை, என் புலமை ஆதாயமாக (அறிவுசார் சொத்துரிமை) தொடர்ந்து பதிவிட்டு வரும் வரிசையில், நான் உருவாக்கிய கட்டுரையே, என் தலைவி எனக்குக் கிடைத்த முதன்மையான கடவுள்பேறு! என்கிற இந்தக் கட்டுரை ஆகும்.

 

ஐம்பொழுது:
1.கிழமை: ஞாயிற்றுக்கிழமை
2.நாள்: 14
3.மாதம்: ஆனி
4.தமிழ்த்தொடராண்டு: 5128
5.தமிழ்த்தொடர்நாள்: 1872754

1. முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவிய, இருமைக் கோட்பாட்டிற்குச் சொந்தக்காரர்கள்: மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நாவலந்தேய இந்தியாவில் வாழ்ந்திருந்த அத்தனைத் தமிழர்களும் ஆகிய தமிழ்முன்னோர்கள்.

2. வெளி என்கிற இடத்தின் அடிப்படை இயல்பு: இயக்கமின்மை. அதற்கு அ.வெளி ஆ.விண்வெளி இ.விசும்பு என்கிற மூன்று நிலைகள் உண்டு.

3. காலம் என்கிற பேரளவான தனி ஒன்றுகளுக்கு எண்ணிக்கை உண்டு. தான்தோன்றி இயக்கம் உண்டு. வளர்ச்சியும் உண்டு.

4. தனி ஒன்றுகளின் அடுத்த கட்ட வளர்ச்சி நிலை நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகள்.

5. நான்மறைகளின் அடுத்த கட்ட வளர்ச்சி நிலை புவி கோள்கள் உள்ளிட்ட அனைத்து விண்பொருட்கள்.

6. புவியில் வாழ்கிற நானும், என் சீரான இயக்கத்திற்கு எனக்குக் கிடைத்த நிலையான இயக்கமின்மையான கடவுள்பேறு என் தலைவியும் காலம் என்கிற தலைப்பில், குடும்பம் என்கிற ஒன்றிப்பில் அமைந்த இரு புள்ளிகளே.

7. காலத்தின் இறுதி நிலை பெருவெடி என்றும், அதற்கு முந்தைய பேரண்ட  நிலை வரை காலத்தின் நோக்கம் வளர்தலும் உருவாக்குதலுமே என்று தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவியுள்ளனர் ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில்.

8. இந்த வரிசையில் “வெளி” தான் கடவுள். அந்தக் கடவுள் ஒன்றே ஒன்று. இறை நான்கு. தெய்வம் பல. என்பதும் தமிழ்முன்னோர் நிறுவிய உண்மை ஆகும்.

9. நாம் அனைவரும் வெவ்வேறு நிலையில் வேறுவேறு தெய்வங்களாக உலா வருகிறோம்.

10. தெய்வங்கள் மூன்று வகைப்படும். அவைகள் முறையே அ.கடவுள்கூறு தெய்வம், ஆ.இறைக்கூறுதெய்வம் இ.குலதெய்வம் ஆகும்.

11. நம்மால் உருவாக்கப்பட்டது அனைத்தும் கடவுள்கூறு. நம் உருவாக்கத்தில் பங்கு வகிப்பது அனைத்தும் இறைக்கூறு

12. ஒவ்வொரு ஆணும் அவர் தம் பெற்றோருக்குக் கிடைத்திட்ட கடவுள்கூறு தெய்வம் ஆவான். அவனும் அவன் தலைவியும் இணைந்து ஈன்றெடுத்த பிள்ளைகளுக்குக் குலதெய்வமும் ஆவான்.

13. ஒவ்வொரு பெண்ணும், அதே வகையில் தம் பெற்றோருக்குக் கிடைத்திட்ட கடவுள்கூறு தெய்வம் ஆவாள். அவள் பிள்ளைகளுக்குக் குலதெய்வமும் ஆவாள்.  மேலும் ஒவ்வொரு பெண்ணும், தான் தலைவன் ஆக்கிக் கொள்கிற தலைவனின் சிரான இயக்கத்திற்கு கிடைக்கும் இயக்கமின்மைக்கூறு ஆவாள். கடவுளே மூலமுதலான இயக்கமின்மை என்கிற நிலையில், அந்த இயக்கமின்மைக்கூறு ஆகிய தலைவி, இயக்கம் இயக்கமின்மை அடிப்படையிலும் கடவுள்கூறு ஆகிறாள். உருவாக்க அடிப்படையில் அவளின் பெற்றோருக்கே அவள் கடவுள்கூறு ஆவாள். இயக்கம் இயக்கமின்மை அடிப்படையிலும் கடவுள்கூறு ஆக அமைகிற தலைவி, தலைவனின் சீரான இயக்கத்திற்கு திருமணம் என்கிற தலைப்பில் நிலையான ஒப்புதல் கொடுப்பதால், அந்த இருவகையிலும் கடவுள்கூறு ஆகும் தலைவி, தலைவனுக்கு கடவுள்பேறு ஆகிறாள்.

14. கடவுள்பேறு என்கிற நிலையில் இறைப்பேறு என்கிற ஒன்று எழும் நிலையில் நமக்குக் கிடைக்கிற உடைமைகள் அனைத்தும் இறைப்பேறுகள் ஆகும்.

14. நம்மால் உருவாக்கப்படாமல், நம்சீரான இயக்கத்திற்கு கிடைக்கிற தலைவி நமக்கான உயிர்மை ஆவாள். ஒவ்வொரு ஆணுக்கும் திருமணத்தில் இணைந்த தலைவி மட்டுமே உயிர்மையும், கடவுள்பேறும் ஆவாள்.

15. தலைவனின் சீரான இயக்கத்திற்கு இயக்கமின்மையாக அமைகிற தலைவிக்கு தலைவன் யார்? உயிர்மையான (உடைமை அல்லாத) இறைப்பேறு ஆவான். அவன் காலம் சார்ந்தவன், காலத்தின்கூறு என்பதால் அவனைக் கடவுள்கூறு என்று சுட்ட முடியாது.

16. கடவுள் என்பது உருவாக்கம். இறை என்பது உருவாக்கத்தில் பங்குவகிப்பது.

17. தலைவி உருவாக்கத்தின்கூறு ஆவாள். தலைவன் பங்குவகிப்பின்கூறு ஆவான்.

18. நமது சீரான இயக்கத்திற்கு நமக்கு ஒரு கடவுள்பேறை உருவாக்கித்தந்த தலைவியின் பெற்றோருக்கு பரியம் கொடுத்து தலைவியைப் பெறுவது தமிழியல் மரபு ஆகும்.

19. தலைவி என்கிற கடவுள்பேறையும் பெற்றுக் கொண்டு, வரதட்சனையும் கேட்பது, பெண்மை என்கிற இயக்கமின்மைக்கூறை அடிமையாகப் பெறுகிற, பிராமணியம் பேணிக்கொண்டிருக்கிற, பாகுபாட்டியல் நடைமுறையாகும். அந்தப் பாகுபாட்டியல் நடைமுறையைப் பேரளவாகக் கொண்டாடி இருக்கிற பிரமணிய இனத்திற்கு, அது உடைமை இழப்பிற்கான மந்திரச்செயல்பாடாகி அவர்களுக்குச் சொந்தநாடும் இல்லை. சொந்த மொழியும் இல்லை என்கிற முயக்கத்தை அவர்கள் பெற்று பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

20. கடந்த 3500 ஆண்டுகளாக, உடைமைக்கு மூலமான உயிர்மையைப் பேரளவாக கொண்டாடுகிற தமிழியலைப் புறந்தள்ளி, பேரளவுத்தமிழர் பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் உள்ளிட்ட பல்வேறு அயல்களில் உலா வருகிற காரணம்பற்றியே, தமிழினம் சொந்த நாடு, தொழில், வணிகம், தனித்திறன், வேளாண்மை உள்ளிட்ட உடைமை துறந்து, உலகளாவிய நிலையில், உடல்உழைப்புக் கூலிகளாகவும், நிருவாகக் கூலிகளாகவும் உரிமைக்காகப் பேராடுகிற இனமாகப் பிழைத்துக் கொண்டிருக்கிறது.

இவைகள் இரண்டில், உடல்உழைப்புக் கூலிகள், மிகமிக குறைந்த கூலியிலும், உடல்வலிக்கு டாஸ்மாக்கைத் தேடியும் உடல்நலத்தையும், நிருவாகக்கூலிகள் தங்கள் பெற்றோர் உடல் உழைப்பில் ஈட்டியிருந்த அத்தனைச்சொத்துக்களையும் விலையாக்கிப் பெற்ற சான்றிதழ்களையும் நம்பி பிழைத்துக் கொண்டுள்ளன.

பேரளவான தமிழினம் நிருவாகத் தளத்தில் சான்றிதழையே நம்பியிருக்கிற நிலையில் ஒன்றிய அரசு நினைத்தால், ஒன்றியத்தை ஆளும், பிராமணிய ஆதிக்க அடாவடிகள் ஒற்றைஇரவில் உழைப்பின் ஆதாயம் ஆன பணத்தாள்களைச் செல்லாதது ஆக்கியது போலவும், 2003-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள், சுமார் 1.7 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒரே நாளில் பணிநீக்கம் செய்து இந்திய நிர்வாக வரலாற்றிலேயே மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது போலவும், ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஒற்றை இரவில் சுழியம் ஆக்கிவிட முடிகிற காலக்கட்டத்தை தமிழினம் நடப்பில் உருவாக்கி வைத்திருக்கிறது.

21. நீங்கள் தலைவியின் பேரருமையைப் புரிந்து கொள்ளுவது உங்கள் உடைமையை பேரளவாகக் குவிப்பதற்கான மந்திரச் செயல்பாடு ஆகும். உங்கள் பெற்றோர் உங்களுக்கு மட்டுமே குலதெய்வம். உங்கள் பெற்றோர் இருக்கும்வரை உங்கள் உடன்பிறப்புகளில் உங்களுக்கான பொறுப்பு எதுவும் இல்லை. என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டிருந்தால், நீங்கள் உங்கள் தலைவியிடம் எதையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய தேவை எழாது. அவளிடம் இருந்து உங்களுக்குச் சிறப்பான முயக்கம் எளிதாகக் கிடைக்கும்.

22. நீங்கள் தலைவி என்றால், உங்கள் தேவை எதுவென்றாலும், உங்கள் தலைவனிடம், யாரையும் எதையும் ஒப்பிடாது, உங்கள் தலைவனைக் குற்றப்படுத்தாமல் நேரடியாகக் கேட்க வேண்டும்.

23. உங்கள் பெற்றோருக்குத் (உடன்பிறப்புகளுக்கு அல்ல) தேவைப்படுவதையும், உங்கள் தலைவனிடம், யாரையும் எதையும் ஒப்பிடாது, உங்கள் தலைவனைக் குற்றப்படுத்தாமல் நேரடியாகக் கேட்க வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.