உலகின் மொத்த மக்கள் தொகை: 830கோடி. உலகின் மொழியினங்கள் ஏழாயிரம். உலகின் மொத்த மதங்கள் ஏழு மட்டுமே. அந்த ஏழு மதங்கள் பேணும் வகைக்கான மொழிகளும், நாடுகளும் மட்டுமே உலகின் அதிகார மையங்களாக இயங்கி வருகின்றன. இதிலிருந்து தமிழினம் சொந்த மொழியோடும் சொந்த நாட்டோடும் வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், ஐந்திரம் அல்லது தமிழியல் அல்லது தமிழர்வாழ்க்கை முறை அல்லது தமிழினத்தின் மதம் மீட்பு என்று தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இணையத்தில் கிடைக்கிற உலக மதங்கள் குறித்த வரலாறு: 1. ஹிந்து மதம்: 2. பௌத்த மதம் (புத்தம்) 3. சமண மதம் (Jainism) 4. சீக்கிய மதம் 5. கிறிஸ்தவ மதம் 6. இஸ்லாம் மதம் 7. யூத மதம் (Judaism) **ஒரு சுவாரசியமான உண்மை:** மதம் என்பது மனிதர்களை ஆன்மீக ரீதியாக இணைப்பது போல, இந்த மொழிகள் அந்தந்த மதங்களின் தத்துவங்களையும் கலாச்சாரத்தையும் தலைமுறை கடந்து கடத்தும் கருவிகளாகக் கொண்டாடப்படுகின்றன. உலகில் முதலாவதாகத் தோன்றிய மொழிகள் இரண்டு. உலகின் எல்லா மதமும் வேறுவேறு தனிமனிதச் சான்றோரால் முன்னெடுக்கப்பட்டு, அதைப்பின்பற்றுகிறவர்களால் வழிவழியாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற வகைக்கு விதியாக்கப்பட்டு, மதம் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது. பிராமணிய ஹிந்து மதம், அராபிய இஸ்லாம் மதம், ஐரோப்பிய கிறித்துவ மதம், மற்றும் மார்க்சிய மதங்களால் கவரப்பட்டு தமிழியலில் இருந்து விலகியவர்களால், தமிழியலுக்கான மொழியான தமிழில் இருந்து வெளியேற இந்தியாவின் நடப்பு அரசியல் அமைப்புச் சட்டம் பேணுகிற இருபதுக்கும் மேலான மொழியினங்கள் உருவாக்கப்பட்டது. நான், தாய்த்தமிழ்ப் பள்ளி என்று ஒரு பள்ளியை, மேட்டூர் அணை புதுச்சாம்பள்ளியில் தொடங்கிய போது, இந்தத் தெளிவு எனக்கு உறுதியானது. நான் உருவாக்கிய தாய்த்தமிழ்ப் பள்ளி, எனக்குப் பின்னால் இருபதுக்கும் மேலான தாய்த்தமிழ்ப் பள்ளிகள் உருவாகக் காரணம் ஆனாலும் நாங்கள் இயங்கியிருந்த வேறுவேறு இயல்கள் நாங்கள் ஒருங்கிணைவதை தடுத்தன. தமிழ்நாட்டில் தோன்றிய ஒவ்வொரு தாய்த்தமிழ் பள்ளியும் வேறுவேறு இயல்களை பேணுகிற நோக்கமுடையனவாக இருந்தனவேயன்றி தமிழ்வழிக்கல்வியை பேணுகிற நோக்கத்திற்கு ஒருங்கிணைய முடியவில்லை. தமிழியலை உலக மதங்களோடு ஒரு மதமாக முன்னெடுக்காமல், தமிழ்வழிக்கல்வியையோ, தமிழுக்கான ஒரு நாட்டையோ தக்கவைக்க முடியாது என்று புரிந்து கொண்டு, தமிழியல் என்கிற தலைப்பில் ஒன்று பத்து நூறு ஆயிரமாக மக்களை ஒருங்கிணைக்கும் பாடாற்றலில் ஈடுபட்டு வருகிறேன். தமிழியல் கட்டுமானத்திற்கு முயலாமல், அந்தப் பிராமணியத்தை எதிர்த்து களமாடியிருந்த திரவிட இயக்கங்களின் தோல்வி தமிழியல் மீட்பே நிலையானது என்கிற பாடத்தை நமக்குக் கற்றுத்தருகிறது. தமிழியல் கட்டுமானத்திற்கு முனையாமல், நேற்று தோற்றுப்போன மேதகு பிரபாகரனும், தமிழியல் கட்டுமானத்திற்கு முனையாமல், நாளை தோற்கவிருக்கிற விஜய்யும், தமிழியல் கட்டுமானத்திற்கு முனையாமல், தொடர்ந்து தோற்கவிருக்கிற சீமான் போன்றவர்களும் தரப்போகிற பாடமும் தமிழியல் மீட்பே நிலையானது என்பது ஆகும். 3500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழியலில் வாழ்ந்திருந்த தமிழனமே உலகிற்கு கிழமைகள், எண்கள், வாழ்க்கை பற்றிய புரிதல், அம்மா அப்பா என்கிற உறவுச்சொற்கள், திருமணம் உள்ளிட்ட அனைத்தையும் உலகினருக்கு வழங்கிய பெருமைக்குரிய வாழ்க்கை வாழ்ந்திருந்தது. உலக மதங்கள் அனைத்தும் தமிழியல் என்கிற இருமெய் கோட்பாட்டை ஆதரித்தும் எதிர்த்தும் எழுந்தவைகளே. நாம், தமிழியலில் இருந்து வெளியேறிய காரணம் பற்றியே, தமிழ்க்கல்வியையும், இந்தியாவிலும் ஈழத்திலும் ஆட்சி அதிகாரத்தையும், சொந்த மண்ணையும் இழந்தோம். கடவுளில் இயங்குகிற மந்திரம் என்கிற தமிழர் வாழ்வியலைக் கற்று, ஐந்திரமாண்புகளைப் பேரளவாகக் குவிப்போம். தமிழியல் நிறைவோம், தமிழையும் தமிழ் நிலத்தையும் ஆள்வோம்.
உலகில் உள்ள பெரும்பாலான மதங்கள் குறிப்பிட்ட சில மொழிகளைத் தங்களுடைய **புனித மொழிகளாகவோ (Sacred Languages), வழிபாட்டு மொழிகளாகவோ அல்லது தங்களின் மூல நூல்கள் எழுதப்பட்ட மொழிகளாகவோ** போற்றிக் கொண்டாடுகின்றன. உலகப் புகழ்பெற்ற முக்கிய மதங்களும், அவை முதன்மையாகக் கொண்டாடும் மொழிகளும் இதோ:
**சமஸ்கிருதம்:** வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை, இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற பெரும்பாலான மூல நூல்கள் எழுதப்பட்ட மொழி. இது "தேவ பாஷை" என்று போற்றப்படுகிறது.
ஹந்தி: ஹிந்து மதத்தினரின் பேச்சு மொழியாகவும், கல்வி மொழியாகவும், மதமற்றவர்களை ஹிந்துக்கள் என்கிற தலைப்பில் அடக்கி அவர்கள் மீது திணிப்பதற்கான மொழியாகவும் பேணப்பட்டு வருகிறது.
**பாலி (Pali):** கௌதம புத்தர் தனது போதனைகளை மக்கள் மொழியான பாலி மொழியிலேயே வழங்கினார். பௌத்தத்தின் மூல நூல்களான 'திரிபிடகம்' (Tripitaka) பாலி மொழியில்தான் எழுதப்பட்டுள்ளன. Theravada பிரிவினர் இம்மொழியைப் புனிதமாகக் கருதுகின்றனர்.
**சமஸ்கிருதம் & திபெத்திய மொழி:** Mahayana மற்றும் Vajrayana பௌத்தப் பிரிவுகளில் சமஸ்கிருதமும், திபெத்திய மொழியும் தத்துவ நூல்களுக்காகக் கொண்டாடப்படுகின்றன.
**பிராகிருதம் / அர்த்தமாகதி (Prakrit / Ardhamagadhi):** சமண மதத் தீர்த்தங்கரரான மகாவீரர் தனது போதனைகளைப் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் பிராகிருத மொழியிலேயே வழங்கினார். இவர்களின் ஆகம நூல்கள் இம்மொழியில்தான் உள்ளன. (தென்னிந்தியாவில் தமிழ் மொழியும் சமணர்களால் பெரிதும் வளர்க்கப்பட்டு, கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது).
**பஞ்சாபி (குருமுகி எழுத்துவடிவம்):** சீக்கியர்களின் முதன்மைப் புனித நூலான 'குரு கிரந்த் சாகிப்' (Guru Granth Sahib) பஞ்சாபி மொழியின் **குருமுகி (Gurmukhi)** எழுத்துவடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. எனவே, இம்மொழியைச் சீக்கியர்கள் ஆன்மீகப் பெருமையுடன் போற்றுகிறார்கள்.
கிறிஸ்தவ வரலாற்றில் காலத்திற்கு ஏற்ப மூன்று முக்கிய மொழிகள் புனிதத்துவத்துடன் பார்க்கப்படுகின்றன.
**எபிரேயம் (Hebrew):** பைபிளின் பழைய ஏற்பாடு (Old Testament) எழுதப்பட்ட மூல மொழி. இயேசு நாதர் வாழ்ந்த யூத சமூகத்தின் தாய்மொழி.
**அரமேயிக் (Aramaic):** இயேசு நாதர் தனது வாழ்நாளில் அன்றாடம் பேசிய மற்றும் போதனைகள் செய்த மொழி.
**கிரேக்கம் (Greek):** பைபிளின் புதிய ஏற்பாடு (New Testament) முதன்முதலில் பரவலாக எழுதப்பட்டு, உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரவக் காரணமான மொழி.
* *(கூடுதல் குறிப்பு: கத்தோலிக்க திருச்சபையில் **லத்தீன் (Latin)** மொழி நீண்டகாலமாக முதன்மை வழிபாட்டு மொழியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது).*
ஆங்கிலம் கிறித்துவர்கள் அனைவருக்குமான ஒருங்கிணைப்பு மொழியாகப் பேணப்பட்டு வருகிறது.
**அரபி (Arabic):** இஸ்லாமிய மார்க்கத்தின் மிக உன்னதமான புனித நூலான 'திருக்குர்ஆன்' இறக்கப்பட்ட மொழி. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தங்களின் அன்றாட ஐங்காலத் தொழுகைகளையும், வழிபாடுகளையும் அரபி மொழியிலேயே மேற்கொள்கின்றனர்.
**எபிரேயம் (Hebrew):** இவர்களின் புனித நூலான 'தோரா' (Torah) எழுதப்பட்ட மொழி. யூதர்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் ஆன்மீக வழிபாடுகள் அனைத்தும் எபிரேய மொழியையே மையமாகக் கொண்டுள்ளன.
தமிழ் உள்ளிட்ட உலகின் ஏழாயிரத்திற்கு மேலான மொழிகள் இந்த மதங்களில் இரண்டாந்தர மொழிகளாகப் கீழ்மைப் படுத்தப்பட்டு வருகின்றன.
ஒன்று: தமிழ். இரண்டு: அடையாளம் இழந்து, நடப்பு ஏழாயிரம் மொழிகளின், காலமாகி விட்ட தாய் ஆகும். இந்த ஏழு மதங்களிலும் இரண்டாந்தர, மூன்றாந்தர, நான்காந்தர மொழியாக என்று வரிசைப்பாட்டுக்கு உள்ளாகி இருக்கிற ஒரு மொழி தமிழ்.
மதம் என்கிற சொல், வாழ்க்கைமுறை என்பதற்கான சமஸ்கிருத தலைப்பு ஆகும்.
தமிழுக்குக் கூட்டுச்சிந்தைனையால் அமைந்த வாழ்க்கைமுறை உண்டு. அது ஐந்திரம் என்கிற தமிழியலும் வகைப்பாட்டியலும் ஆகும்.
தமிழினம் மட்டுமே வாழ்ந்திருந்த இந்தியாவைக் கைப்பற்றி கடந்த 3500 ஆண்டுகளாக தமிழினத்தில் இருந்து இருபதுக்கு மேலான மொழியினங்கள் தோன்றுவதற்கு காரணமாகி அனைத்து இனங்களையும் ஆண்டுகொண்டிருப்பது ஹிந்துத்துவா பிராமணியமே,



