Show all

தமிழைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது யார்?

உலகில் முதலாவதாகத் தோன்றிய மொழிகள் இரண்டு. அவற்றில் ஒன்றுதான் தமிழ். இரண்டாவது மொழி எது என்பதைக் கண்டறிய முடியாது. ஏனென்றால், அந்த இரண்டாவது மொழி இன்றுவரை ஏழாயிரம் மொழிகளாகக் கிளைத்துவிட்டது.

ஆங்கிலம் உலகமொழியாக இருக்கிறது. இந்தி இந்தியாவின் ஆதிக்க மொழியாக இருக்கிறது. ஆனால்,

1. உலகமொழி என்கிற தகுதி இல்லாத தமிழ்;

2. பேரளவான தமிழர்களாலேயே மதிக்கப்படாத தமிழ்;

3. பெரும்பாலானவர்களுக்குக் கல்வி மொழியாக இல்லாத தமிழ்;

4. தமிழ்நாட்டின் எண்பது விழுக்காட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள்கூட தமிழாக இல்லாத தமிழ்;

இத்தகைய சூழலிலும், தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பது எப்படி?

இந்த வியப்புவினா யாருக்கும் மிக எளிதாக எழலாம்.

மொழியையும் வாழ்க்கைமுறையையும் காக்கும் கடவுள்

ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உடைமைகள் இரண்டு. ஒன்று, அவனுடைய தாய் தன் குருதியால் வளர்த்துக் கொடுத்த உடல். மற்றொன்று, தன் மூச்சுக்காற்றை ஒலிக்கப் பழக்கித் தந்த சொந்த மொழி.

ஒரு மனிதன் பேணும் மொழிப்பயன்பாடு கடவுளில் பதிவாகிறது. அந்தப் பதிவின் அடிப்படையில், கடவுள் அவனுடைய சொந்த மொழியையும், அவனுக்கான சொந்த வீட்டையும் அடுத்த தலைமுறைக்கும் காத்துத் தருகிறது.

எனவே, ஒரு மொழியைக் காப்பதற்கு அந்த மொழியைப் பேணும் தனிமனிதனும் குடும்பமும் தொடர்ந்து மொழிப்பயன்பாட்டைக் கடைப்பிடித்தால் போதும். தமிழைப் பேணும் கடைசிக் குடும்பம் இருக்கும் வரை தமிழைக் காத்து நிற்பதற்கான அரசியல் அமைப்புச் சட்டமாகக் கடவுள் இருக்கிறார்.

அதேபோல, ஒரு மனிதன் தன் தோன்றிய இனத்தின் வாழ்க்கைமுறையைப் பேணுவது கடவுளில் பதிவாகிறது. அந்தப் பதிவின் அடிப்படையில், அவனுடைய சொந்த வாழ்க்கைமுறைக்கான தனித்திறன், தொழில், வணிகம், வேளாண்மை ஆகிய உடைமைதள வாய்ப்புகளையும், ஆட்சி அதிகாரத்தையும் அடுத்த தலைமுறைக்கும் பேணி வழங்கும் வகையில் சொந்த நாட்டைக் கடவுள் தருகிறது.

ஆனால், சொந்த நாட்டைக் காப்பதற்குத் தனிமனிதனும் குடும்பமும் மட்டும் போதாது. தமிழியல் வாழ்க்கைமுறையைப் பேணும் இனக்குழு கட்டாயம் தேவை.

தமிழ்மன்னர்களின் ஆட்சிக்குப் பிறகு, அத்தகைய இனக்குழுவைத் தமிழினம் தொடர்ந்து பேணியிருக்கவில்லை. இதுவே தமிழ்மக்கள் உலகில் எங்கும் தங்களுக்கான சொந்த நாட்டைப் பேண முடியாமல் போனதற்கான பொதிமை.

மனித இயக்கங்களால் தமிழைக் காக்க முடியுமா?

ஆங்கிலம் உலகமொழியாக இருப்பது முதல், தமிழ்நாட்டின் எண்பது விழுக்காட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் தமிழாக இல்லாதது வரையான அனைத்தும் தமிழுக்கு எதிரான மனித இயக்கங்கள் சார்ந்த முன்னெடுப்புகளே.

ஆனால், அந்த முன்னெடுப்புகளால் ஒருபோதும் தமிழை இல்லாமல் செய்துவிட முடியாது.

இதற்கான அடிப்படை இயற்கை விதி:

**இயக்கமின்மையின் மீது இயங்குவது சீரான இயக்கம். இயக்கத்தின் மீது இயங்குவது தாறுமாறு இயக்கம்.**

இயற்கையின் முதன்மையான இயக்கமின்மையே கடவுள்.

மனிதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தமிழ்அமைப்புகள், திராவிட இயக்கங்கள், மார்க்சிய அடிப்படையிலான தனித்தமிழ்நாட்டு முனைப்புகள், தமிழ்தேசியம் பேசும் அமைப்புகள், ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட மார்க்சிய அடிப்படையிலான போர்கள் என எவற்றாலும் தமிழுக்கான நாட்டையோ ஆட்சி அதிகாரத்தையோ உறுதிப்படுத்த முடியவில்லை.

இத்தகைய மனித இயக்கங்கள் சில வெற்றிகளைப் பெற்றிருக்கலாம். ஆனால், அவற்றால் தமிழினத்திற்கான சொந்த நாட்டையும் அதிகாரத்தையும் மீட்டுத் தர முடியவில்லை.

இவற்றையெல்லாம் தாண்டி, தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை தமிழ் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் கடவுளின் முயக்கமே என்பதுதான் நூறு விழுக்காடு உண்மை.

தமிழ்முன்னோர் கடவுளுக்கு வழங்கிய அரசியல் அமைப்புச் சட்டம்

கடவுளின் அந்த முயக்கத்திற்கு உறுதியான அரசியல் அமைப்புச் சட்டத்தை வழங்கியவர்கள் தமிழ்முன்னோர். அவர்கள் தோன்றிய இடத்தில் தொடர்ந்து பேணி வந்த வாழ்க்கைமுறையும், அதற்காக அவர்கள் ஆற்றிய பாடாற்றலுமே அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை.

தமிழ்த் தனிமனிதர்கள் அந்தப் பாடாற்றலைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் தமிழ் இன்றும் வாழ்கிறது. ஆனால், அதே தமிழினம் தனது நாட்டையும் ஆட்சி அதிகாரத்தையும் முற்றாக இழந்துவிட்டது.

 

இதற்கான பொதிமையை நடப்பில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு, முதலில் கடவுள் தமிழ்ச்சொல் மட்டுமே என்பதை உணர வேண்டும்.

கடவுளின் முழுநேர வேலை என்ன? கடவுளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட முதலாவது மொழி எது? கடவுளின் சட்டப்புத்தகம் உங்களிடம் இருக்கிறது. எழுதுகோலும் உங்களிடமே இருக்கிறது. இந்நிலையில், உங்களுக்குத் தவறான தீர்ப்பு எப்படிக் கிடைத்துவிட முடியும்?

இதற்கான விடைகளைப் புரிந்துகொள்ள, இதுவரை நான் எழுதியுள்ள தொடர்புடைய கட்டுரைகளைப் படித்திருப்பது கட்டாயம்.

தூய தமிழைக் காக்கும் கடவுளின் முயக்கம்

தமிழ் என்பது தூய தமிழே என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தமிழ்முன்னோர் கடவுளுக்கு வழங்கிவிட்டனர்.

அதன் அடிப்படையில், தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலக்கும் மொழிப்பயன்பாட்டைத் தமிழிலிருந்து வெளியேற்றி, அவ்வாறு கலப்பவர்களையும் தமிழினத்திலிருந்து வெளியேற்றும் வேலையைக் கடவுள் செய்துகொண்டிருப்பதால், தமிழ் தமிழாகவே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது.

தமிழில் சமஸ்கிருதத்தையும் பிராகிருதத்தையும் கலந்த வகையின் அடிப்படையில், இந்தியாவில் இன்றைக்கு இருக்கின்ற இருபது மொழிகளும் மொழியினங்களும் தோன்றிவிட்டன.

இந்தியாவும் ஈழமும் இதே அடிப்படையைப் பகிர்ந்து கொள்கின்றன. சிங்கள இனத்தின் மூலம் கூவேணி என்கிற தமிழச்சியே.

இவற்றைப் புரிந்துகொள்வதற்கு, 'பிராமணியச் செழுமைப்பாட்டிற்காகப் பாடாற்றிய பாணினி, குந்தி, பாஞ்சாலி, காந்தாரி உள்ளிட்ட அனைவரும் தமிழச்சிகளே!' என்கிற எனது கட்டுரையைப் படிப்பது கட்டாயம்.

இந்தியாவிலோ ஈழத்திலோ இருக்கிற ஒற்றை மனிதன்கூட, நான் தமிழன் என்கிற மூல இனத்தினன் அல்லன் என்று உலகின் எந்தச் சோதனையின் மூலமும் நிறுவிவிட முடியாது. மோடி, அமித்ஷா, ராஜபக்சே உள்ளிட்ட அனைவரும் தமிழச்சிகளின் பிள்ளைகளே!

ஏழாயிரம் மொழிகளையும் யாரால் காக்க முடியும்?

ஆங்கிலம் உலகமொழியாக இருப்பது முதல், தமிழ்நாட்டின் எண்பது விழுக்காட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் தமிழாக இல்லாதது வரையான மனித இயக்கங்களால், உலகின் இரண்டாவது மொழியான மூலமொழியைக் கண்டறிய முடியாது.

அதேபோல, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட ஏழாயிரம் மொழிகளில் எந்தவொரு மொழியையும் அதன் தோன்றிய வடிவத்தில் தொடர்ந்து காப்பாற்றவும் முடியாது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆங்கிலம் இன்றைய நடைமுறையில் இல்லை. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தி என்கிற ஒரு மொழியே இருந்திருக்கவில்லை.

இதற்கும் அடிப்படையான இயற்கை விதி ஒன்றுதான்:

**இயக்கமின்மை என்கிற கடவுளில் இயங்குவது சீரான இயக்கம். இயக்கம் என்கிற மனிதனில் இயங்குவது தாறுமாறு இயக்கம்.**

இரண்டாவது மொழி, அதைப் பேசிய மனிதர்களின் தாறுமாறு இயக்கத்தால் துண்டு துக்கடையான வெற்றிகளைப் பெற்று, ஏழாயிரம் மொழியினங்களாகப் பிரிந்து கிடக்கிறது.

ஆனால், தமிழ் பேசும் கடைசிக் குடும்பம் இருக்கும் வரை கடவுளால் தமிழைக் காத்து நிற்க முடியும்.

தமிழைக் காக்க விரும்புகிறவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது

தமிழைத் தொடர்ந்து காக்க வேண்டும் என்று கருதுகிறவர்கள் கடவுளைக் கட்டாயம் புரிந்துகொண்டாக வேண்டும்.

கடவுளைப் புரிந்துகொள்ளாதவர்களை, நாளை ஒரு புதிய மாற்றுமொழிக்கும் அந்த மாற்றுமொழியின் இனத்திற்கும் சொந்தக்காரர்களாக ஆக்கி, தமிழிலிருந்து வெளியேற்றிவிடும் கடவுள்.

எனவே, தமிழைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது யார் என்ற வினாவிற்கான விடை, வழக்கமான அரசியல் இயக்கங்களிலோ, மொழிப்பற்றுப் போராட்டங்களிலோ இல்லை.

**தமிழ்முன்னோர் வகுத்து வழங்கிய வாழ்வியல் அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அதனைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும் தமிழ்க் குடும்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு, கடவுளின் முயக்கமே தமிழைத் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை காத்து நிற்கிறது.** தமிழைக் காக்க விரும்புகிறவர்கள் இதைப் புரிந்துகொள்வதே முதன்மையான கடமை.

மொழியைக் காப்பதற்கு தனிமனிதன் தமிழில் இருந்தால் போதும். பலஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் தமிழாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது. என்கிற நிலையில், ஒற்றைத் தமிழனாவது தமிழில் இருந்து கொண்டிருக்கிற தொடர்ச்சிக்கான பொதிமையாக இருந்திருக்கிறான்.

இன்னொரு மொழி ஏழாயிரம் மொழிகளைக் கிளைத்து விட்டது என்பதில் அவர்களில் மொழிகாக்க என்று ஒற்றை மனிதரும் தொடர்ச்சி பேண முயலவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நாட்டைக் காப்பதற்கு அதன் இனக்குழு அதன் வாழ்க்கை முறையைக் (மதம்)  கொண்டாடி இருக்க வேண்டும். உலகின் ஏழு மதங்களுக்கும் ஒன்றுக்குப் பலவாக நாடுகள் உள்ளன. உலகினர் வாழ்க்கை முறையில் (மதம்) உறுதியாக இருந்திருக்கின்றனர். என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழினத்திற்கு உலகின் எந்த மூலையிலும் ஒற்றை நாடும் இல்லாமல் போனதற்குக்கான பொதிமை (காரணம்) தமிழினம், தமிழியல் பேணாமல், பல்வேறு அயல்களைப் பேணியிருத்தலே ஆகும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.