Show all

இயலும் அயலும்! (சொந்த இயலைக் கொண்டாடி பேரளவு உடைமைகளைக் குவிக்க கடவுளின் முயக்கம் பெறுவோம்)

நீங்கள் யாரையும் பின்பற்றாது, ஒரு மதத்தையோ வழிகாட்டியையோ சாராது, உங்கள் செயல், உங்கள் எண்ணம் உங்கள் தமிழ் (எண்ணமொழி) என்று பயணிக்கும் நிலையில், உங்களுக்கு சொந்தமான கடவுள் இடத்தில் சிறப்பாக நீங்கள் வாழும் வகைக்கான கட்டுமானம் எழுகிறது. 

உங்கள் செயல், எண்ணம், தமிழ் (எண்ணமொழி) இயல்பூக்கமாக, தனி அடையாளமாக உங்களால் முன்னெடுக்கிறபோது, உங்களுக்கு சொந்தமான கடவுள் இடத்தில் சிறப்பாக நீங்கள் வாழும் வகைக்கான கட்டுமானத்தில் உங்கள் அதிகாரத்திற்கான கொடி நாட்டப்படுகிறது. 

இயலும் அயலும்!
(சொந்த இயலைக் கொண்டாடி பேரளவு உடைமைகளைக் குவிக்க கடவுளின் முயக்கம் பெறுவோம்.)

இயல்: திகழ்தமிழ முன்னேற்றக் கழகம் 
அயல்: திராவிட முன்னேற்றக் கழகம்

இயல்: அண்ணா திகழ்தமிழ முன்னேற்றக் கழகம் 
அயல்: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

இயல்: எழுஞாயிறு
அயல்: உதயசூரியன்

இயல்: மு.க.இரும்பொறை
அயல்: மு.க.ஸ்டாலின்

இயல்: ச.அருட்செழியன்  
அயல்: ச.ஜோசப்விஜய்

இயல்: வெற்றிவயவன்
அயல்: விஜய்காந்த்

இயலும் அயலும் என்கிற இந்தப்பட்டியலின் நோக்கம்- இயலில் இருக்க வேண்டியவர்கள் அயலில் இருப்பதால் அவர்களுக்கு இயலை உணர்த்துவது ஆகும்.

நரேந்திர மோடி, காங்கிரஸ், பாஜக, ஹிந்தி, ஹிந்துத்துவா, மதம், வேதம், பாவம், புண்ணியம், அதிர்ஷ்டம் போன்றவை நமக்கு அயல்கள். அயல்களை அயல்மொழியிலேயே அடையாளம் காணவேண்டும்.

காப்பியம், இலக்கியம், சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம், கணியம், மந்திரம், புசை, அருள், ஐந்திரம், நான்மறை, சாதி என்பன இயல்கள்.

சாதகத்திற்கு ஜாதகம் அயல்

சோதிடத்திற்கு ஜோஸ்யம் அயல்

மந்திரத்திற்கு மந்த்ரா அயல்

நான்மறை என்பன நிலம் நீர் தீ காற்று என்பன. வேதத்தை நான்மறை என்று தமிழ்ப்படுத்துவது பிழை.

ஐந்திரத்திற்கு பிரபஞ்சமும் பஞ்சபூதமும் அயல்

சாதிக்கு ஜாதி அயல்

பூசைக்கு பூஜை அயல்

கடவுளிடம் உங்களுக்கு அமைந்த சொந்த இடத்தை எளிதாகப் பற்றிக் கொள்ள

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.