விசும்பு: குறிஞ்சித்திணைக் கடவுள்கூறு தெய்வம் சேயோனின் மாட்சிக்குரியவற்றுள் முதலாவது உடல்நலம். உடல்நலம் பேணலின் அடிப்படைத் தேவைகள் ஆன- உணவு உடை இருப்பிடம் சேயோனின் மாட்சிக்குரியவைகள். ஆனாலும், அதை மிகமிக எளிதாகப் பெற்றுத்தரும்- சேயோனின் நினைவும், சேயோன் கோயிலில் அமைக்கப்பட்டிருக்கிற தெய்வக் காட்சியும். நிலம்: மனமகிழ்ச்சி பேணலின் அடிப்படைத் தேவையான கல்வி, அதையொட்டிய புத்தகம், எழுதுபொருள், செல்பேசி, கணினி உள்ளிட்டவை மாயோனின் மாட்சிக்கு உரியவை ஆகும். அவற்றுள் பேரளவு பாடாற்றியே பெறமுடிகிற பொறியியல், மருத்தியல் (MEDICAL) போன்ற படிப்பு எதையும் மிகமிக எளிதாகப் பெற்றுத்தரும்- மாயோனின் நினைவும் மாயோன் கோயிலில் அமைக்கப்பட்டிருக்கிற தெய்வக் காட்சியும். பேரளவு பணத்திற்கான தனித்திறன், தொழில், வணிகம், வேளாண்மை, ஒப்பந்தம், அரசுப்பணி, பேரளவு ஊதியம் தரும் தனியார் நிறுவனப்பணிகள் மன்னனின் மாட்சிக்கு உரியவைகள். இவைகள் அனைத்துமே பேரளவு பாடாற்றலில் கிடைக்கப் பெறுகிறவைகளே என்கிற நிலையில், அவற்றுள் நீங்கள் விரும்பிய எந்தவொன்றையும் பெற்றுத்தரும்- மன்னனின் நினைவும் மன்னன் கோயிலில் அமைக்கப்பட்டிருக்கிற தெய்வக் காட்சியும். ஒவ்வொரு தற்பரை நேரத்து இயக்கத்திலும், பயணத்திலும், பல்வேறு வகையான பயணஉதவி வண்டிகள் தேவையிலும், பயண உதவி வண்டிகளில் பயணிக்கும் அனைவருக்குமான பாதுகாப்பிலும், பேரளவு பாடாற்றி இருக்க வேண்டிய பாதுகாப்பைப் பெற்றுத்தரும்- கொற்றவையின் நினைவும், கொற்றவைக் கோயிலில் அமைக்கப்பட்டிருக்கிற தெய்வக்காட்சியும். தொடர்புகளின் ஒத்துழைப்பிற்கான உங்களின் பேச்சுத்திறன், ஆளுமை, அறிவாற்றல், அழகியல், அனைவரையும் கவரும் வகையான இயல்பு, உங்கள் பாடாற்றலில் நேர்த்தி, இவைகளுக்குத் தேவையான எந்தக் கருவியும் என்கிற அனைத்தையும் பெற்றுத்தரும்- வருணனின் நினைவும் வருணன் கோயிலில் அமைக்கப்பட்டிருக்கிற தெய்வக்காட்சியும். உங்கள் கேட்பு எந்த மாண்பு ஆனாலும் அதை ஒருங்கிணைக்கும் ஆற்றல் கடவுளுக்கு மட்டுமே உண்டு. எந்தக் கேட்பிற்கு முன்னாலும் கடவுளே! விசும்பு தெய்வமே என்கிற விளிப்பு கட்டாயம் ஆகும். இவை அனைத்திற்குமான கடவுள் கேட்பிற்காக, நாம் அன்றாடம் பலமுறை ஓதியிருப்பதற்கான பொது மந்திரம்:
அவற்றுள், இருப்பிடம் என்கிற சொந்த வீடு, பேரளவு பாடாற்றிப் பெறவேண்டியதானது என்பதை அனைவரும் அறிவோம்.
முல்லைத்திணை இறைக்கூறு தெய்வம் மாயோனின் மாட்சிக்குரியவற்றுள் முதலாவது மனமகிழ்ச்சி.
நீர்:
மருதத்திணை இறைக்கூறு தெய்வம் மன்னின் மாட்சிக்குரியவற்றுள் முதலாவது பணம்.
தீ:
பாலைத்திணை இறைக்கூறு தெய்வம் கொற்றவையின் மாட்சிக்குரியதில் முதலாவது பாதுகாப்பு.
காற்று:
நெய்தல்திணை இறைக்கூறு தெய்வம் வருணனின் மாட்சிக்குரியது தொடர்புகளின் ஒத்துழைப்பு.
கடவுளே!
விசும்புதெய்வமே!
எனக்கு,
குறிஞ்சித்திணைக் கடவுள்கூறுதெய்வம்
சேயோனின் மாட்சிக்குரிய
சீரான உடல் நலத்தையும்,
முல்லைத்திணை இறைக்கூறுதெய்வம்
மாயோனின் மாட்சிக்குரிய
பேரளவாள மன மகிழ்ச்சியையும்,
மருதத்திணை இறைக்கூறுதெய்வம்
மன்னனின் மாட்சிக்குரிய
மிகப் பேரளவான பணத்தையும்,
பாலைத்திணை இறைக்கூறுதெய்வம்
கொற்றவையின் மாட்சிக்குரிய
பயண உதவி வண்டிகளில் பாதுகாப்பையும்,
நெய்தல்திணை இறைக்கூறுதெய்வம்
வருணனின் மாட்சிக்குரிய
பேரளவான தொடர்புகளின் ஒத்துழைப்பையும்,
வழங்கி ஆவன செய்ய வேண்டுகிறேன்
கடவுளே!
விசும்புதெய்வமே!
அருள்செய்க.



