Show all

கடவுளின் முழுநேர வேலை!

கடவுளின் முழுநேர வேலை, நீங்கள் கேட்டதைக் கொடுத்துக் கொண்டே இருப்பது மட்டுமே என்பதை, மிகமிகத் தெளிவாக நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர் ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில்.

நாம் நேரடியாக நம்முடைய தேவைகளைக் கடவுளிடம் கேட்பதற்கான கலையே மந்திரம். 

வெற்றியாளர்களும், ஐந்து அகவை வரையிலான குழந்தைகள் மட்டுமே இயல்பூக்கமாக மந்திரம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள். 

மந்திரத்தில் தொடரும் வரை வெற்றியாளர்கள் வெற்றியாளர்களாகவே உலா வருகிறார்கள். 

ஆறாவது அகவையில் இருந்து, பிள்ளைகள், கொஞ்சம் கொஞ்சமாக மந்திரப்பாடாற்றலில் இருந்து வெளியேற, பெற்றோர்களும், சுற்றங்களும் ஆசிரியர்களும் காரணம் ஆகிறோம்.

கடந்த 3500 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்த தமிழினமும் கடவுளிடம் நேரடியாக கேட்டுப்பெறும் கலையான மந்திரத்தில் மிகச்சிறப்பாக உலா வந்திருந்ததற்கு பேரளவான சான்றுகள் குவிந்து கிடக்கின்றன.

ஆனால், நடப்பில் அத்தனைத் தமிழர்களும், பிராமணியம், அராபியம், ஐரோப்பியம். உலகமதங்கள், மார்க்சியம் என்கிற அயல் மலைப்பில், அந்த அயல்கள் பேணியிருக்கும், துண்டு துக்கடா வெற்றிகளைத் தரும், மனிதனில் இயங்குவதை பேரளவாகக் கொண்டாடி, போராட்ட வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒற்றைத் தமிழனும் கூட முழுமையாக மந்திரப்பாடாற்றி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறார் என நிறுவுவதற்குத் தரவுகள் ஏதும் இல்லை. ஆனால் மந்திரம் இருக்கிறது.

நம் செயல்கள் அனைத்தும், நம் எண்ணம் அனைத்தும் நம் பேச்சுக்கள் அனைத்ததும் ஒவ்வொரு கண்ணிமைப்பு நேரமும் கடவுளில் பதிவாகிக் கொண்டே இருக்கிறது. 

அந்தப்பதிவுகளில் இருந்து நமது தேவைகளைக் கடவுளாகவே புரிந்து கொண்டு அதை நிறைவேற்றும் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

செயலால்- 
பல்வேறு அயல்கள் சார்பில், மனிதனில் இயங்குகிற நடவடிக்கைகளாக, நமக்கு தேவை இல்லாதவைகளையே நாம் அனைவரும் செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே, நமக்குத் தேவையில்லாதவைகள் ஆன போராட்டங்களையே நமக்குக் கடவுளால் ஒருங்கிணைக்க முடிகிறது.

எண்ணத்தால்- 
அதே வகையான, மனிதன் மீதான இயக்கமாக, அவனுக்கு அது கிடைத்துவிட்டதே என்றும், எனக்கு இது கிடைக்கவில்லையே என்றும், மொத்தத்தில் யாருக்கும் எதுவும் கடவுள் மூலமாகக் கிடைக்க வேண்டாம்  என்பதை, நமது கேட்பு என்று கடவுள் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை நமது எண்ணத்தால் நாம் கடவுளுக்குக் கொடுப்பதால், கடவுளால் நமக்கு ஒருபோதும் கிடைக்கமாட்டாத எட்டாக்கனிகளையே ஒருங்கிணைக்க முடிகிறது.

பேச்சால்-
“தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்கிற மந்திர அடிப்படையைப் புறந்தள்ளி, நமக்கான தீமைகளை அடுத்தவர்களே தருவதாக, முழுக்க முழுக்க அடுத்தவர்களுடைய  குற்றங்களையே கலந்துரையாடிக் கொண்டிருக்கிற காரணம் பற்றி, குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்கிற சொலவடை அடிப்படையில், பணம், பொருள், அன்பு, அறிவு, உறவு, நட்பு என்று அனைத்துச் சுற்றங்களையும் நாம் இழப்பதற்கான வேலையை மட்டுமே கடவுளால் நமது தேவையாகப் புரிந்து கொண்டு நிறைவேற்றித் தர முடிகிறது.

நமக்கான உடல்நலம், மனமகிழ்ச்சி, செல்வச்செழிப்பு, சீரான இயக்கத்திற்கான முழுமையான பாதுகாப்பு, பேரளவான தொடர்புகளின் ஒத்துழைப்பு என்கிற ஐந்திர (நிலம், நீர், தீ, காற்று, விசும்பு) மாண்புகளைக் கடவுளிடம் கேட்டுப் பெறுவது எப்படி என்பதே மந்திரம் ஆகும். 

மாதிரி மந்திரம்:
உங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்குக் கொண்டு, சென்றுவிடக் கிளம்பும்போது,
கடவுளே!
விசும்பு தெய்வமே!
எனக்கும், 
என் பிள்ளைகளுக்கும்,
எனது பயண உதவி வண்டிக்கும் 
பயணப் பாதுகாப்பாய் வரவேண்டும்
கடவுளே!
விசும்பு தெய்வமே
அருள்செய்க 
என்று ஒதிவிட்டு, பயணத்தைத் தொடருங்கள். 
நிறைவான பயணத்தைக் கடவுள் கட்டாயம் ஒருங்கிணைக்கும். அதை உங்களால் புரிந்துகொள்ளவும் முடியும்.

இப்படி, உங்கள் தேவைகளுக்கான சின்னச் சின்ன மந்திரங்களை நீங்களே கட்டி ஓதிப்பாருங்கள்.
கடவுளே!
விசும்பு தெய்வமே
எனது பிள்ளை, அவனது பள்ளியில் புதியதொன்றை மகிழ்ச்சியாகக் கற்று வரவேண்டும்
கடவுளே! 
விசும்பு தெய்வமே!
அருள்செய்க.
என்பது போல, உங்களின் சிறிய சிறிய ஆசைகளுக்கு மந்திரம் கட்டி மீண்டும் மீண்டும் ஓதி வந்து பாருங்கள். ஒரு எல்லையில் நீங்கள் கேட்டது அனைத்தும் கிடைத்திருக்கும்.

அப்போது முடிவு செய்யுங்கள்! பெரிய பெரிய கனவுகளை நனவாக்கிக் கொள்ள மந்திரம் கற்றே ஆக வேண்டும் என்பதை.

அந்தப் பெரும்பேற்றுக்கு ஐந்திணைக்கோயிலின் வெளியீடு ஆன மந்திரம் அச்சுநூல், எங்களிடம் நேரடியாக வாங்க:
புத்தகத்தின் விலை ரூ380. அஞ்சல் செலவு ரூ45 மொத்தம் ரூபாய்425 ஐ 9500612859 செல்பேசி எண்ணிற்கு கூகுள்பே அல்லது போன்பே அல்லது வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பவும். உங்கள் தெளிவான முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றை kumarinadanr@gmail.com மின்அஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

அந்தப் பெரும்பேற்றுக்கு ஐந்திணைக்கோயிலின் வெளியீடு ஆன மந்திரம் மின்நூல், அமேசான் கிண்டலில் வாங்க:
இணைப்பு!

அந்தப் பெரும்பேற்றுக்கு ஐந்திணைக்கோயிலின் வெளியீடு ஆன மந்திரம் அச்சுநூல், அமேசான் இணையத்தளத்தில் வாங்க:
இணைப்பு!

அந்தப் பெரும்பேற்றுக்கு ஐந்திணைக்கோயிலின் வெளியீடு ஆன ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை, அருட்காசு, மந்திரம்நூல், பதிவேடு, தூவல் எனும் ஐந்திரப்பொதியை வாங்கி பயன்பெறுவது குறித்த விரிவான புரிதலுக்கு: 
இணைப்பு:

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.