Show all

மந்திரம் நூலைப் படியுங்கள்!

ஐந்திணைக்கோயில் வெளியீட்டில், தமிழறிஞர் குமரிநாடன்.ரு மந்திரம்கல்வியாளர் எழுதிய மந்திரம் நூலைப் படியுங்கள் என்று வேண்டும்  இசைப்பாடல்.


எடுப்பு
மந்திரம் நூலைப் படியுங்கள்!
மனதில் மாண்பைக் குவியுங்கள்
உங்கள் வாழ்வின் கதவைத் திறக்கும்
ஐந்திர நெறியைக் கற்றிடுங்கள்!

கண்ணி 1 — தலையெழுத்து
தலையெழுத்தை நாமே எழுதும்
உண்மை அறிந்து செயல்படுவோம்!
பிறரை நொந்து புலம்புவதை விட்டு
பிடித்த வாழ்வை வடிவமைப்போம்!
எண்ணம், சொல், செயலைச் செம்மை செய்து
எதிர்காலத்தை உருவாக்குவோம்!
எது வேண்டும் என்று தெளிவாய் உணர்ந்து
எல்ல வளமும பெற்றிடுவோம்

மீளெடுப்பு
மந்திரம் நூலைப் படியுங்கள்!
மனதில் மாண்பைக் குவியுங்கள்
உங்கள் வாழ்வின் கதவைத் திறக்கும்
ஐந்திர நெறியைக் கற்றிடுங்கள்!

கண்ணி 2 — ஐந்திர மாண்புகள்
நலம் வேண்டும், மகிழ்ச்சி வேண்டும்,
நாளும் செல்வம் பெருகிட வேண்டும்!
சீரான இயக்கப் பாதுகாப்பு வேண்டும்,
சுற்றத்தின் ஒத்துழைப்பு வேண்டும்!
நிலமும் நீரும் தீயும் காற்றும்,
நிறைந்த விசும்பும் அறிந்திடுவோம்!
ஐந்திர மாண்பின் வழியைக் கற்று
இனிய முன்னேற்றம் அடைந்திடுவோம்!

கண்ணி 3 — தமிழ்முன்னோர் கொடை
தமிழ்முன்னோர் தந்த கலையாம் மந்திரம்,
தலைமுறைக்குக் கிடைத்த பெரும் செல்வம்!
வாழ்வை நாமே வடிவமைக்கும்
வழியைக் காட்டும் அறிவின் விளக்கம்!
காப்பியம், இலக்கியம், நிமித்தகம்,
கணியத்தோடு மந்திரம் ஐந்தும்,
இயல்கணக்கின் கலைகள் என்று
இனிதே அறிந்து போற்றிடுவோம்!

கண்ணி 4 — முன்னேற்றப் பயணம்
குழந்தை மனத்தின் இயல்பூக்கத்தை
குன்றாமல் காத்து வளர்த்திடுவோம்!
குறைகளை எண்ணிக் காலம் கழிக்காமல்
குறிக்கோள் நோக்கிப் பயணித்திடுவோம்!
பணம், புகழ் நிறைந்த வாழ்க்கையில்
பண்புடன் நலமும் மகிழ்ச்சியும் வேண்டும்!
பாதுகாப்பும் ஒத்துழைப்பும் சேர
புதிய முன்னேற்றம் படைத்திடுவோம்!

நிறைவெடுப்பு
மந்திரம் நூலைப் படியுங்கள்!
மனமகிழ்வோடு படியுங்கள்!
தமிழ்முன்னோர் தந்த கொடையை
தலைமுறையெல்லாம் அறியச் செய்யுங்கள்!
மந்திரம்! மந்திரம்! முன்னேற்ற மந்திரம்!
ஐந்திணைக்கோயில் வழங்கும்
வாழ்வியல் மந்திரம்!
மந்திரம் நூலைப் படியுங்கள்!
வாழ்க்கையை வளமாக்குங்கள்!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.