Show all

கணியக்கலை அறிவோம் தொடர்-2: நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப்பட்ட முன்னேற்றக் கலைகள்

நிமித்தகம்,

கணியம்,

மந்திரம்.

இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள்.

நிமித்தம்-

என்றால், ‘காலம்சார்ந்த’ என்று பொருள்.

நிமித்தகம் என்பது காலம்சார்ந்த முன்னேற்றக் கலை.

ஆக நிமித்தகம் என்கிற கலை தோற்றுவிக்கப் படுவதற்கு,

காலம் குறித்த,

பார்வை-தீர்மானம்-முழுமையானவரையறை

நிறைவு படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

காலத்திற்கு அடிப்படையான கோள்களை யுணர்ந்து,

தற்பரை-விநாழிகை-நாழிகை-பகல்இரவு-நாள்-கிழமை-மாதம்-பருவம்-ஆண்டு-ஆண்டின் சுழற்கணக்கு தொடர்கணக்கு என்பனவெல்லாம் நிறைவு படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

நிறைவு செய்யப் பட்டது.

60தற்பரைஒருவிநாழிகை,

60விநாழிகைஒருநாழிகை,

பகல்30இரவு30-60நாழிகைஒருநாள்;

ஏழுநாள்ஒருகிழமை

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதியம் வியாழம் வௌ;ளி காரி என்கிற கிழமைக்குரிய ஏழுநாட்களுக்கு ஏழுபெயர்கள்.

பனிரென்டுமாதங்கள்;

ஆறுபருவங்கள்;

15தற்பரை 31விநாழிகை 15நாழிகை 365நாள் கெண்டது ஓர் ஆண்டு யென்று காலத்தை

நிறைவு செய்தான் நம்பழந்தமிழன்.

இதுவரை நாம் விவரித்தது காலம்.

காலம் சார்ந்தது அல்லவா நிமித்தகக்கலை?

இத்துடன் பிறந்த நேரம்

அதையொட்டி நிகழப் போகும் இடர்சோதிப்பதற்கான

சாதகக் குறிப்புகள் உள்ளடங்கியது.

நிமித்தகக் கலை எனும்

காலம் சார்ந்த இந்தப் பகுதியை மட்டும்,

ஜாதகம் ஜோஸ்யம் என்று ஆரியர் கண்டுபிடித்த கலை போல தலையில் வைத்துக் கொண்டாடியும்,

பகுத்தறிவு மார்க்சிய தலைப்பில் இருப்பவர்கள்,

மூடநம்பிக்கை என்று எள்ளி நகையாட,

-இன்று தமிழ்ஆண்டு5119 வைகாசி மாதம் ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை 4வது நாழிகை நேரத்தில் இந்தப் பதிவு மௌவல் இணையத்தளத்தில் இடப்படுகிறது-

என்கிற தொடர்ஆண்டுகணக்கு உள்ளிட்ட

முழு நிமித்தகக்கலையையும் பின்னுக்குத் தள்ளி,

உலகுக்கே கிழமையையும் நிமித்தகக் கலையின் பெரும்பகுதியை வானியல் என்ற தலைப்பில் கொடையாகக் கொடுத்த தமிழர்கள் நாம் என பெருமிதம் கொள்ள வேண்டியவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.