கொள்ளு என்பது ஒருவகை பயறு வகையாகும். பண்டைய மருத்துவமான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் இவை மருந்தாகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இளைத்தவனுக்குக் எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்னும் பழமொழியின் வாயிலாக நன்கு உணரலாம்.
- ஊளைச சதையை குறைக்கும் சக்தி கொள்ளு பருப்புவில் உள்ளது. மேலும் கொள்ளு பருப்பை ஊறவைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.
- பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக உள்ளது. இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது, வெள்ளைப் படுதல் மற்றும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்த உதவும்.
- கொள்ளை தினசரி உணவுகளில் சேர்க்க கூடிய அவியல், துவையல், இரசம், பொறியலாக சமைக்க முடியும்.
- கொள்ளு உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடலை இறுக்கும் ஆற்றலுள்ளதாகவும் ,தொந்தி மற்றும் இதய நோயுள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாகும்.
- ஊறவைத்த கொள்ளை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். மிளகு, சீரகம் சேர்த்த ரசம் மிகவும் நல்லது.
- கொள்ளை ஆட்டி பால் எடுத்து தண்ணீர்க்குப் பதில் அதை சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
- கொள்ளை வேகவைத்து எடுத்த நீரை குடிப்பதன் மூலம் காய்ச்சல் மற்றும் சளியை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.