முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. அவற்றில், முருங்கை கீரையின் பயன்களையும், முருங்கை கீரை சூப் செய்யும் முறையையும் இந்த தொகுப்பில் காணலாம்.
முருங்கை கீரை சூப் தேவையான பொருள்கள்:
- முருங்கை கீரை - ஒரு கையளவு
- பாசிப்பருப்பு - 1/2 கப்
- மிளகு - ஒரு டீ ஸ்பூன்
- சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 5
- பூண்டு - மூன்று பற்கள்
- தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
மேலே சொன்ன பொருட்கள் எல்லாவற்றையும் சிறுது தண்ணீர் சேர்த்து ஒன்றாக வேக வைத்து, அதன் பின் எடுத்து வடிகட்டியோ அல்லது அப்படியே பருகலாம். விரும்புவோர்கள் சிறிது மிளகு தூளை மேலே இட்டு பருகலாம்.
பயன்கள்:
- ரத்த சோகை உள்ளவர்களுக்கு நல்ல ரத்தம் மீண்டு ஊற இது மிகச்சிறந்த மருந்து
- உடல் சூட்டை தணிக்க மிகவும் துணை புரியும்.
- தோல் வியாதிகள் மற்றும் அலர்ஜிகளுக்கும் இது சிறந்த மருந்து
- ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய் போன்றவற்றிற்கும் நல்ல மருந்தாக அமையும்
- வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ இதை சாப்பிட்டால் ரத்தமும் சிறுநீரும் சுத்தமடைந்து சீராகும்.
- கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை போக்கி, பிரசவத்தை துரிதப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு
- மேலும், ஆண்களின் விந்து விருத்திக்கு இது மிகவும் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.