கோடையில் உடலுக்கு தேவையான நீர் சத்து அதிகமாக தேவைப்படும், அப்போது உடம்பின் நீர் சத்து குறையாமல் இருக்க பயன்படும் இயற்கையான குளிர்பானம் மோர் ஒன்று தான். இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம். மோரில் வைட்டமின் பி , புரோட்டீன் ,கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் மோரில் உள்ள வைட்டமின் பி உதவி புரிகிறது.
மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:
- கால்சியம் குறைபாடு நீக்கும்(மோர் குடிப்பதன்மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெற முடியும். பாலில் உள்ள கால்சியத்தை விட மோரில் உள்ள கால்சியம் அதிகம்).
- தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதன் முலம் விட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
- இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமனா குணம் கொண்டது.
- மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும்.
- வயிற்றெரிச்சலுக்கும், வயிற்றுப்புண் மற்றும்நெஞ்செரிச்சலுக்கும் இது ஒரு நல்ல மருந்து .
- மோருடன் இஞ்சி, பச்சைமிளகாய்,கருவேப்பிலை மற்றும் புதினா போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், உடம்பில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் , உடல் எடை குறையும் மற்றும் செரிமானம் குறைபாடு தீரும் .
- சருமத்தை பாதுகாக்க மோர் உதவுகிறது. இது சருமத்தைப் பிரகாசமாக்குவதோடு, மென்மையாகவும் மாற்றக்கூடியது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையவும் இது உதவும். இதில் லாக்டிக் அமிலம் இருப்பதால், இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள புள்ளிகள் மறையும்.
இத்தகைய குறைபாடுகளை தீர்க்கும் மோரை இனி தினமும் அனைவரும் பருகி பயன்பெறுங்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.