மருதாணி ஒரு ஆயுர்வேத மூலிகையாக பயன்படுகின்ற மருதாணி புதர் செடியாகவோ அல்லது மரமாகவோ வளரக்கூடியது. மருதாணியின் அழகு மற்றும் மருத்துவ குணங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
- மருதாணி இலை கிருமி நாசினியாக செயல்ப்படுகிறது .இது கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது.
- மருதாணி இட்டுக் கொள்வதால் நகசுத்தி வராமல் தடுக்கவும் மற்றும் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கும்.
- மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்
- மருதாணி இலையை பேஸ்ட்டாக செய்து வாரம் ஒரு முறை இந்த பேஸ்டை தலை முடியில் தடவினால் பொடுகு குறைந்து, தலைமுடியை மென்மையாக்கி, பளபளப்பை உண்டாக்கும். மேலும் நரை முடியை மறைப்பதற்காகவும் அதனை பயன்படுத்தலாம்.
- மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
- மருதாணி இலை ஆன்டி-பாக்டீரியல் பேஸ்ட் அல்லது ஆன்டி-ஃபங்கல் பேஸ்ட்டாக பயன்படுகிறது.
- மருதாணி பூவை ஒரு துணியில் சுத்தி தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மருதாணி பூ தூக்கம் வர வைக்கும் தன்மை உடையது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.