'கப்பலோட்டிய தமிழன்” என்று எல்லோரும் பெருமையாகப் பேசும் வ.உ.சிதம்பரனார், ஆங்கிலேயனுக்கு எதிராகக் கப்பல் வாங்கிய கதையைப் பற்றிப் பார்ப்போம். 21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் என்பது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஒரு அரசு பொதுத்துறை நிறுவனம் ஆகும். தமிழ்நாட்டின் மின்வாரிய உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனல் மின் நிலையங்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் நிலக்கரி அனுப்பும் தனித்துவப் பொறுப்போடு 47 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கழகம் நிறுவப்பட்டது. தமிழ் அண்ணா, தமிழ் பெரியார் தமிழ் காமராஜ் ஆகிய மூன்று ஆழமற்ற வரைவு கப்பல்கள் மற்றும் பிற கப்பல் உரிமையாளர்களிடமிருந்து பட்டயக் கப்பல்கள் மேற்கண்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. தவிர, கன்னியாகுமரியின் முக்கிய நிலத்திலிருந்து விவேகானந்தர் பாறை நினைவிடம் மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு பிஎஸ்சி படகுகளை இயக்குகிறது. 'கப்பலோட்டிய தமிழன்” என்று எல்லோரும் பெருமையாகப் பேசும் வ.உ.சிதம்பரனார், ஆங்கிலேயனுக்கு எதிராகக் கப்பல் வாங்கிய கதையைப் பற்றிப் பார்ப்போம். பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் எனும் ஆங்கிலேய கப்பல் கம்பெனியின் ஆதிக்கமே இந்தியப் பெருங்கடலில் கொடிகட்டிப் பறந்தது. குறிப்பாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வணிக மற்றும் பயணிகள் போக்குவரத்தில் அந்த நிறுவனமே முதலிடத்தில் இருந்து, அந்தத் தருணத்தில்தான், வஉசிக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. அது, வணிகத்துக்காக வந்திறங்கிய ஆங்கிலேயனை விரட்ட, அதே வணிகத்தை இந்தியர்களாகிய நாம் கையிலெடுக்கவேண்டும். ஆங்கிலேயர் நட்டப்பட்டு, நாட்டைவிட்டே ஓடவேண்டும் எனக் கருதினார். ஏழைகளுக்கு இலவசமாக வாதாடும் வழக்கறிஞராக இருந்த வஉசி சொந்தக் கப்பல் ஒன்றை வாங்கி அதை ஆங்கிலேயனுக்கு எதிராக முன்னெடுக்க நினைத்தார். விளைவு, உருவானது சுதேசி நாவாய் சங்கம்! தமிழ்த் தொடர்நாள் எண்: 1829034 அன்று (16.10.1906) பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு போட்டியாக, சுதேசி கப்பல் நிறுவனம் எனும் இந்திய கப்பல் நிறுவனத்தை உருவாக்கினார், தமிழன் வஉசி அவர்களுக்கு உறுதுணையாக, வள்ளல் பாண்டித்துரை, சேலம் விஜயராகவாச்சாரி, ஹாஜி.பக்கீர் முகம்மது என பலரும் பொருளுதவி தந்து உதவினர். அவர்களையெல்லாம் பங்குதாரர்களாக, நிறுவனத்தின் பொறுப்பாளர்களாக நியமித்துக்கொண்டார் வ.உ.சி. அப்போதே சுமார் 10 லட்சம் ரூபாய் முதலீட்டுடன், 40 ஆயிரம் பங்குகளைக்கொண்டிருந்தது சுதேசி கப்பல் நிறுவனம். வெற்றிகரமாக கப்பல் கம்பெனியைத் தொடங்கிவிட்டார். ஆனால் சொந்தமாகக் கப்பல் வாங்கும் அளவுக்கு பொருள் வந்துசேரவில்லை. அதனால் ஷாவ்லைன் ஸ்டீமர்ஸ் எனும் கப்பல் நிறுவனத்திலிருந்து வாடகைக்குக் கப்பல் எடுத்தார். தூத்துக்குடிக்கும் இலங்கையின் கொழும்புக்கும் இடையே போக்குவரத்தைத் தொடங்கினார். வஉசியின் வளர்ச்சியைப் பிடிக்காத ஆங்கிலேயர்கள், கப்பலை வாடகைக்கு கொடுத்த ஷாவ்லைன் ஸ்டீமர்ஸ் நிறுவனத்தை மிரட்டத் தொடங்கினர். இதனால் அச்சமுற்ற அந்த நிறுவனம், வஉசிக்கு கப்பல் தர மறுத்தது. வாடகை ஒப்பந்தத்தை முற்றிலுமாக இரத்து செய்தது. இதனால், சுதேசி கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் வஉசி அடுத்தகணமே, கொழும்பிலிருந்து ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து, போக்குவரத்தைத் தொடர்ந்து நடத்தினார். பெரு முயற்சிகளுக்குப் பிறகு எஸ்.எஸ். காளியோ எனும் பிரெஞ்சுக் கப்பலை வஉசி வாங்கிட- ஆங்கிலேயனுக்குப் போட்டியாக, சொந்தக்கப்பல் விடப்போகிறார் வஉசி என்ற பெருமிதத்தில் நாட்டு மக்களெல்லாம் கொண்டாடி மகிழ்ந்தனர். 1,500 இருக்கைகள், 4,000 சரக்கு மூட்டைகளை ஏற்றிச்செல்லும் அளவுக்கு பரந்து விரிந்திருந்தது வ.உ.சியின் பெருங்கப்பல். அதுமட்டுமில்லாமல், கம்பெனிக்கு வலுசேர்க்கும் விதமாக எஸ் வேதமூர்த்தி என்பவரும் பிரான்ஸ் நாட்டிலிருந்து எஸ். எஸ். லாவோ எனும் கப்பலை வாங்கிவந்து சேர்த்தார். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் கடலோடியாக தமிழன் சிறந்திருந்தான். தமிழ்நாட்டு வணிகர்கள் உலகில் கடற்கரை உள்ள நாடுகள் அனைத்திற்கும் கப்பல் செலுத்தி வணிகம் புரிந்து வந்திருந்தனர். தமிழ் வணிகர் தமிழ்மன்னர்களை விடவும் செல்வச் செழிப்பினராய் இருந்தனர் என்பதை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் இன்றும் பறைசாற்றுவதாக நின்று நிலவுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், இன்னுமொரு கப்பலை வாங்கி இங்கிலாந்துக்கும் தமிழ்நாட்டிற்கும் கப்பலோட்டிய தமிழன் வஉசியின் பெயரில் இயக்க வேண்டும் என்கிற நமது வேண்டுகோளை தமிழ்நாட்டு அரசுக்கு விடுத்து மகிழ்கிறோம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,70,998.
இந்திய செய்தித்தாள்கள்கள் முழுவதும், வஉசி கப்பல் வாங்கிய கதையே சாதனையாக பரவிக்கிடந்தன. இந்தியா இதழில் இருந்த பாரதியார், தனது நண்பன் வஉசியின் சாதனையை பாராட்டி எழுதினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.