கடவுள் என்கிற சொல்லில் தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருளை அறியமாட்டாமல், கடவுளைப் பிராமணியப் படைப்பாக்கமாகப் பிழையாகக் கருதி, 'கடவுள்மறுப்பு' என்கிற தலைப்பைக் கையில் எடுத்த இயக்கம் திராவிட இயக்கம். அதே திராவிட இயக்கம்- கடவுள்கூறு தெய்வமான முருகனுக்கு, 'முத்தமிழ் முருகன் மாநாடு' என்கிற தலைப்பில் விழா எடுப்பது, கடவுள் என்கிற சொல்லில், தமிழ்முன்னோர் பொதித்த பொருளை புரிந்து கொள்ளும் முயற்சிக்கானது என்று நிறுவலாம். பிராமணிய எதிர்ப்பு என்கிற பிராமணிய செழுமையக்கத்திலிருந்து விடுபட்டு, தமிழியல் நோக்கிய திராவிட இயக்கத்தின் இந்த நகர்வை பாராட்டி மகிழ்வோம். அந்தப் பாராட்டு நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. 11,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5126: உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாகச் சிறந்து விளங்குகிறது. ஆகவே, உலக முருக அருட்பேறாளர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இம்மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. முருகப்பெருமானை நக்கீரர், குமரகுருபரர், அருணகிரிநாதர் தொடங்கி வாரியார் வரை போற்றிய அருட்பேறாளர் பலர் உண்டு. முருகனைப் பற்றிய பலதிற கொள்கைகள், கதைகள், கட்டுகள் நாட்டில் உலவுகின்றன. முதன்முதலில் முருகனின் மேன்மை கண்ட பழந்தமிழர், இளமையும் அழகும் உடைய செம்பொருளாகக் கொண்டு வழிபட்ட மாண்பை ஆய்வு நோக்கில் நிறுவ முருக அருட்பேறாளர்களை உலகளவில் ஒருங்கிணைத்து அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு- 5125. பழனியில், 08,09,ஆவணி, தமிழ்த்தொடராண்டு-5126. (24.08.2024 மற்றும் 25.8.2024) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. என்று, முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் குறிக்கோள்களாக: முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல். முருகனை அடைவிக்கும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல் . மேன்மை பொலியும் முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல். முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து ஆழ்ந்தெடுத்து அதன் முத்துக்களை உலகறிய பரப்புதல். அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகக் கோட்பாடுகளை இளைஞர்கள் மனத்தில் பதித்து வைத்து உலகை உயர்த்த வழி வகுத்தல். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொண்டு முத்தமிழ் முருகன் அருட்பேறு பெற்ற ஆதினங்கள்: 1. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், திருவண்ணாமலை ஆதீனம். 2. திருக்கயிலாய பரம்பரை திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், பேரூர் ஆதீனம். 3. தவத்திரு குமரகுருபர சுவாமிகள், சிரவை ஆதீனம். 4. தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம். மாநாட்டில் கலந்து கொண்டு முத்தமிழ் முருகன் அருட்பேறு பெற்ற பேருரையாளர்கள்: 1. முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் 2. ஆறு.திருமுருகன் 3. திரு. சுகி சிவம் 4. திருமதி. தேச மங்கையர்க்கரசி 5. முனைவர் அ. சிவபெருமான் 6. மேனாள் பேராசிரியர்- தமிழ்த்துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 7. முனைவர் போ. சத்தியமூர்த்தி தலைவர், தமிழ்த்துறை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழவில் இணைத்துக் கொள்ளப்பட்ட பேராளர்கள். 1. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தலைவர் 2. கூடுதல் தலைமைச் செயலாளர், 3. சிறப்புப் பணி அலுவலர், 4. கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) 5. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், 6. திருக்கயிலாய பரம்பரை 7. தவத்திரு குமரகுருபர சுவாமிகள், 8. தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், 9. முதுமுனைவர் மு.பெ. சத்தியவேல் முருகனார் உறுப்பினர் 10. திருமதி. தேச மங்கையர்க்கரசி, 11. திரு. ந. இராமசுப்பிரமணியன், 12. திரு. தரணிபதி ராஜ்குமார், 13. கூடுதல் ஆணையர் (விசாரணை) 14. கூடுதல் ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்) 15. கூடுதல் ஆணையர் (பொது) 16. திரு. க. சந்திரமோகன், 17. இணை ஆணையர், திண்டுக்கல் மண்டலம் உறுப்பினர்
இலங்கை
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை
துணைத்தலைவர்
இந்து சமய அறநிலையத்துறை.
உறுப்பினர்
ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை.
உறுப்பினர் மற்றும் செயலர்
இந்து சமய அறநிலையத்துறை.
உறுப்பினர்
திருவண்ணாமலை ஆதீனம். உறுப்பினர்
திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,
பேரூர் ஆதீனம்.
உறுப்பினர்
சிரவை ஆதீனம்.
உறுப்பினர்
மயிலம் பொம்மபுர ஆதீனம்.
உறுப்பினர்
திரு. சுகி சிவம்,
உறுப்பினர்
உறுப்பினர்
பேச்சாளர்.
உறுப்பினர்
கோவை.
உறுப்பினர்
இந்து சமய அறநிலையத்துறை.
உறுப்பினர்
இந்து சமய அறநிலையத்துறை.
உறுப்பினர்
இந்து சமய அறநிலையத்துறை.
உறுப்பினர்
அறங்காவலர் குழுத்தலைவர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி.
உறுப்பினர்
இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி
உறுப்பினர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,084.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.