Show all

இரான் ஏவுகணைத் தாக்குதலே காரணம்- கனடா, அமெரிக்கா குற்றச்சாட்டு! விழுந்து நொறுங்கி, பயணர் அனைவரும் பலியான உக்ரைன் விமானம்

தெஹ்ரான் விமான நிலையம் அருகே விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருக்கலாம் என கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம்சாட்டியிருக்கின்றன.

26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 170 பயணிகளுடன் உக்ரைன் தலைநகர் கிய்வ் நோக்கிப் புறப்பட்ட போயிங் ரக உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பலியாகினர். 

இந்த நிகழ்வு தற்செயலான விபத்து என்று பேசப்பட்டு வந்த நிலையில், உக்ரைன் விமானம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக கனடா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைன் விமானம் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என பல்வேறு உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பான காணொளி ஒன்றும் அமெரிக்கா தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,393.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.