பொருளியல் பாங்கேற்பு, வாய்ப்புகள், கல்வித்தகுதி, நலங்கு, உயிர்வாழ்க்கை, அரசியல் தன்னதிகாரம் ஆகிய அம்சங்களில் 146 பொருளியல்கள் மதிப்பிடப்பட்டன. 30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகப் பொருளியல் மாநாட்டு அமைப்பு உலகஅளவில் பாலின சமத்துவம் குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொருளியல் பாங்கேற்பு, வாய்ப்புகள், கல்வித்தகுதி, நலங்கு, உயிர்வாழ்க்கை, அரசியல் தன்னதிகாரம் ஆகிய அம்சங்களில் 146 பொருளியல்கள் மதிப்பிடப்பட்டன. இந்த மதிப்பீட்டில் பாலின சமத்துவம் பேணலில், முதல் மூன்று இடங்களை ஸ்காண்டினேவியா நாடுகளான ஐஸ்லாந்து, பின்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் பெற்று பாராட்டு பெறுகின்றன. நான்காவது இடத்தில் நியூசிலாந்தும், ஐந்தாவது இடத்தில் சுவீடனும் ஆறாவது இடத்தில் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவும் இடம் பிடித்துள்ளன. இந்தியா 62.9 மதிப்பெண்கள் பெற்று 135ஆம் இடத்தில் உள்ளது, என்கிற தகவல் நமது தலைகுனிவிற்கானதாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,309.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.