‘அதிபராக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய நான் குறிப்பிட்டுள்ள இடங்களில், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டாக வேண்டும்’ தமிழ் இனத்தை ஒடுக்கும் வகையில் இப்படியான ஓர் உத்தரவை வெளியிட்டுள்ளார் கோத்தபய. 07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில் புதிதாக அதிபர் பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்சே என்றவுடன், உலகளாவிய மனித உரிமை அமைப்புகளுக்கும், ஈழத்தமிழர் அனுதாபிகளுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், உலகளாவி வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழர்களுக்கும் நினைவுக்கு வருவது, விடுதலைப் புலிகளுடன் போர் என்ற போர்வையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலுக்குத் தலைமை தாங்கியவர் கோத்தபய ராஜபக்ச என்பதே. இலங்கையில் தமிழ் இனத்தின் மீது சிங்கள ராணுவம் நிகழ்த்திய யுத்தம் முடிவுக்கு வந்தது. இறுதிக் கட்ட தாக்குதலில் ஐநா தடை செய்த பாஸ்பரஸ் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. 03,04,05வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5111 நாட்களில் (17,18,19மே 2019) மட்டும் ஒரு லட்சத்து 45 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தி பெரும்பாலான உலக ஊடகங்களில் வெளியாகின. இப்போது புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபக்ச இலங்கை நாட்டை பாதுகாப்பதாகக் கூறி தமிழ் இனத்தை ஒடுக்கும் வகையில் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், “அதிபராக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய நான் குறிப்பிட்டுள்ள இடங்களில், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்டாக வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,345.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.