உலக அளவில் ஒரு கணக்கெடுப்பில் ஏழைகள் இயல்பாகவே நலமாக இருப்பதற்கு காரணம்- பேரளவாகவும், விலை மலிவாகவும் கிடைக்கிற உணவுப் பொருட்களில் சத்துக்கள் நிறைந்திருப்பதே என்கிற உண்மை வெளிக் கொணரப்பட்டது. அப்படியான உணவுவகைகளில் ஒன்றுதான் இந்த மத்திமீன். மத்திமினை உண்பவர்கள் நம்பிக்கையோடும், இதுவரை மத்திமீன்கள் குறித்து அறியாதவர்கள் உறுதியோடும் மத்திமீனை முன்னெடுங்கள் என்தற்கானது இந்தக் கட்டுரை. 10,தை,தமிழ்த்தொடராண்டு-5124: மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், நலத்திற்கும் புரதச்சத்து மிகவும் கட்டாயம். இறைச்சிப் புரதங்களில் மிக சிறந்தது மீன் புரதம். இவற்றில் முதன்மையானவை மத்தி மீன்கள். தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் தான் மத்தி மீன்கள் அதிகமாகக் காணப்படும். கேரளா, கர்நாடகா, ஆந்திர மக்கள் மத்தி மீனை விரும்பி உண்டு வருகிறார்கள். மத்தி மீன் தான் கடலூர் மாவட்ட மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது. ஆண்டு தோறும் தைமாதம் முதல் சித்திரை மாதம் வரை மத்தி மீன்கள் கிடைக்கின்றன. விலையும் மிக மலிவாக ரூ.75 முதல் ரூ.100 க்குள் கிடைக்கும். இவற்றில் உடல் நலத்திற்குத் தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள் உள்ளன. 100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது. மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மேலும் தோல் நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், அகவை முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், மூச்சுத்திணறல் நோய், முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும். மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது. விலை குறைவு என்றாலும் சத்து நிறைந்தது தான் மத்தி மீன். இதை உண்பதால் கண், இதயம், நீரிழிவு, எலும்பு மற்றும் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் நன்மை அடையும். கிழமைக்கு இருமுறை மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் நாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து குருதியில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால், மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் அதில் இருக்கும் கால்சியம் சத்து நாம் எலும்புகளின் வளர்ச்சிக்கும் நன்கு உதவுகிறது. மத்தி மீனில் இருக்கும் வைட்டமின் பி 12 நாம் உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் அளவை கட்டுபடுத்தி இதய பாதிப்பில் இருந்து நம்மை காப்பற்றி இதயம் பலப்பட உதவும். மத்தி மீனில் அயோடின் கலந்த தாதுச்சத்து உள்ளதால் அதை நாம் உணவில் சேந்த்து சாப்பிட்டு வந்தால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படுவதை தடுக்கலாம். மத்தி மீனின் செல்களில் இருந்து தான் கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் தோலைப் பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மத்திமீனை உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் குறைபாடு நீங்கி பார்வை திறன் அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்பவர்கள் உணவுக்கட்டுபாட்டில் உள்ளவர்கள் கிழமைக்கு இரு முறை மத்தி மீனை உணவில் சேர்த்து கொண்டால் நாம் உடலை கட்டு கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு மத்திமீன் சிறந்த உணவாகும். இதை அவ்வப்போது சேர்த்துக்கொள்வது நல்லது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,503.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.