கடல் நீர் மட்டம் அதிகரிப்பால், இந்தியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளது என ஐநாவின் பொதுச்செயலர் குட்ரெஸ் கவலை தெரிவித்துள்ளார். 20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐநாவின் பொதுச்செயலாளர் ஆண்டோனியா குட்ரெஸ், தாய்லாந்தில் நடந்த ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது, பாங்காங்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: கடல் நீர் மட்டம் முன்பைவிட, தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. தட்பவெப்ப மையம், வெளியிட்ட அறிக்கையிலும் இது கூறப்பட்டுள்ளது. நாடுகள் இந்த போக்கை மாற்றாவிட்டால், 2050க்குள் 300 மில்லியன் மக்கள் வெள்ளத்தை எதிர்கொள்ள நேரிடும். புவி வெப்பமயமாவதால், இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஜப்பான், சீனா, வங்கதேசம் நாடுகளுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும். தாய்லாந்தில் மக்கள் வசிக்கும் 10 விழுக்காடு இடங்கள் கடலில் மூழ்கும். காலநிலை மாற்றம் வேகமாக இயங்குகிறது. இதனை வணிகர்கள், உரிமையியல் அமைப்புகள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதில் ஐநா உறுதி பூண்டுள்ளது. 2050ம் ஆண்டுக்குள் கரியமில வாயுவை 45 விழுக்காடு குறைக்க வேண்டும். புவியின் வெப்பம் 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிய அனல் மின் நிலையங்கள் அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,328.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.