Show all

அல்-பாக்தாதி இறந்ததை உறுதிசெய்து, புதிய தலைவரை அறிவித்தது! இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்கிற அமைப்பு

இசுலாமிய அரசு அல்லது இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்கிற அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதி இறந்ததை உறுதிசெய்து, தங்கள் அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல்-காசிமியை அறிவித்துள்ளது.

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இசுலாமிய அரசு அல்லது இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்கிற அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதி இறந்ததை உறுதிசெய்துள்ளது. தங்கள் அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல்-காசிமியை அறிவித்துள்ளது.

ஜிகாதி குழுவான, இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொள்ளும் அமைப்பு, தங்கள் அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல்-காசிமியை அறிவித்துள்ளது.

முந்தைய தலைவரான அல்-பாக்தாதியின் இறப்பை முதல்முறையாக அது உறுதி செய்துள்ளது.

அபு இப்ராஹிம் அல்-காசிமி புதிய தலைவராக இருப்பார் என்று தகவல் சேவை வழங்கும் தந்தி மூலம், இசுலாமிய அரசு அல்லது இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்கிற அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த கிழமை இறுதியில் அமெரிக்க சிறப்புப் படைப்பிரிவுகள் சுற்றி வளைத்து நடத்திய தாக்குதலில் அல்-பாக்தாதி கொல்லப்பட்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், இசுலாமிய அரசு அல்லது இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்கிற அமைப்பு வளர்ச்சி அடைந்தபோது தொடங்கி, அமெரிக்க படைப்பிரிவுகளாலும், அதன் கூட்டணி படைகளாலும் தேடப்பட்டு வந்த இராக்கியரான பாக்தாதியின் தலைக்கு 25 மில்லியன் டாலர் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

வடசிரியாவில் அமெரிக்க மற்றும் சிரியா குர்து ஆயுதப்படையினரால் பாக்தாதி கொல்லப்பட்டபோது, செய்தி தொடர்பாளர் அபு அல்-ஹாசன் அல்-முஹாஜீரும் கொல்லப்பட்டதை வியாழக்கிழமை இசுலாமிய அரசு அல்லது இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்கிற அமைப்பு அமைப்பு உறுதி செய்துள்ளது.

இசுலாமிய அரசு அல்லது இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்கிற அமைப்பு சுருக்கமாக ISIL அல்லது இசிஸ் (ISIS) என்று அழைக்கப்படுகிறது. இந்த இயக்கம் ஓர் ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஆகும். இது சிரியா மற்றும் ஈராக்கிலும் வட ஆபிரிக்கா, மத்திய கிழக்காசியா, தெற்காசியா போன்ற பகுதிகளிலும் இயங்குகிறது. இசுலாமிய அரசு அல்லது இராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு என்கிற அமைப்பின் நோக்கம் ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும். இக்குழுவானது ஈராக் போரின் போது உருவாக்கப்பட்டது. இது சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஈராக் பகுதிகளில் கலீபா ஆட்சியை நிறுவி பின்னர் அவ்வாட்சியை சிரியாவுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்பட்டு வருகின்றது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,323.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.