Show all

இன்று உலகப் பெண்கள் நாள்!

இன்று கொண்டாடப் படுகிற உலகப் பெண்கள் நாள்- உலக அனைத்து நாட்கள் போலவே இதுவும் போராடிப் பெற்றதே. தமிழர் பண்பாட்டில் போராடாமலே கிடைத்திருந்தது எல்லா நாள் கொண்டாட்டத்தினருக்கும் உரிமைகள். ஆனால் தமிழுக்கு, தமிழருக்கான உலக நாள் இன்னும் கனவாகவே இருந்து வருகின்றது. உலகப் பெண்கள் நாளில் பெண்ணுரிமைக்கான தேவை தமிழ்ப்பண்பாட்டில் எழாத நிலையில்- இன்னும் கனவாகவே இருந்து வரும் தமிழுக்கு, தமிழருக்கான உலக நாள் அமைய உறுதியேற்போம்.

25,மாசி,தமிழ்த்தொடராண்டு-5125: 

இன்று உலகப் பெண்கள் நாள். ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாள் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். நாளது 32,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-4890 அன்று (14.06.1789) சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். 

கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாரிஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாகக் கிளம்பிய பூவையரைத் துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான். ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம். அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ள குதூகல முழக்கங்கள் வானைப் பிளக்க அரச மாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது. 

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளைக் கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான். இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடியும் துறந்தான். 

ஐரோப்பியவின்  மற்ற நாடுகளிலும் இது போலவே பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். கிரீசில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பேராளர்கள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். 

இந்த நிலையில் பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-4949 (08.03.1848) ஆகும். அன்றைய நாள்தான் உலகப் பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

ஆனால் நம் பழந்தமிழகத்தில் இப்படிப் பெண்ணுரிமை பெறுவதற்கு மட்டுமல்ல எந்த நாளுக்கும் போராடி உரிமை பெற வேண்டிய தேவை இருந்தது இல்லை. மன்னன் அதியமானை நெறிப்படுத்தி நெல்லிக்கனி பெற்ற ஒளவையார் போல, யாரெல்லாம் பெண்பாற் புலவர்களாக அன்றைய தமிழக அரசியலில் கோலோச்சியிருக்கிறார்கள் என்று தேடினால் மனம் நிறைவடையும் அளவிற்கு பட்டியல் நீள்கிறது. 

1.அச்சியத்தை மகள் நாகையார்
2.அள்ளுரர் நன்முல்லை
3.ஆதிமந்தி
4.இளவெயினி
5.உப்பை
6.ஒக்கூர் மாசாத்தியார்
7.கரீனா கண்கணையார்
8.வெறிபாடிய காமக்கண்ணியர்
9.கழார் கீரன் எயிற்றியார்
10.கள்ளில் ஆத்திரையனார்
11.காக்கை பாடினியார் 
12.காமக்கணிப் பசலையார்
13.காரைக்காலம்மையார்
14.வெள்ளி வீதியார்
15.காவற்பெண்டு
16.கிழார் கீரனெயிற்றியார்
17.குட புலவியனார்
18.குமிழிநாழல் நாப்பசலையார்
19.குமுழி ஞாழல் நப்பசையார்
20.குறமகள் இளவெயினி
21.குறமகள் குறிஎயினி
22.குற மகள் இளவெயினியார்
23.கூகைக்கோழியார்
24.தமிழறியும் பெருமாள்
25.தாயங்கண்ணி
26.நக்கண்ணையார்
27.நல்லிசைப் புலமை மெல்லியார்
28.நல்வெள்ளியார்
29.நெட்டிமையார்
30.நெடும்பல்லியத்தை
31.பசலையார்
32.பாரிமகளிர்
33.பூங்கண்ணுத்திரையார்
34.பூங்கண் உத்திரையார்
35.பூதபாண்டியன் தேவியார்
36.பெண்மணிப் பூதியார்
37.பெருங்கோப்பெண்டு
38.பேய்மகள் இளவெயினி
39.பேயனார்
40.பேரெயென் முறுவலார்
41.பொத்தியார்
42.பொன்மணியார்
43.பொன்முடியார்
44.போந்தலைப் பசலையார்
45.மதுவோலைக் கடையத்தார்
46.மாற்பித்தியார்
47.மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
48.மாறோக்கத்து நாப்பசலையார்
49.முள்ளியூர் பூதியார்
50.முன்னியூப் பூதியார்
51.வரதுங்க தேவியார்
52.வில்லிபுத்தூர்க் கோதையார்
53.வெண்ணிக் குயத்தியார்

பெண்களுக்கு ஒற்றை நாள் அறிவித்து பெண்களைக் கொண்டாடியவர்கள்; அல்லர் பழந்தமிழர். அன்றாடம் பெண்கள்; பேணும், கருத்தினராக இருந்தனர் தமிழர்.

 உலகத்தில் பலதரப்பட்டவர்களின் போராட்டத்தால் கிடைக்கப் பெற்றவை பல்வேறு உலக நாட்கள். ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ள சிறப்பு நாட்கள் நூற்றுக்கும் மேலானவைகள்.

இந்த வகை உரிமைகள் எல்லாம் ஆரியர், அராபியர், ஐரோப்பியர் ஆதிக்க வரவுக்கு முந்தைய நமது பழந்தமிழகத்தில் போராடாமலே அமைந்திருந்தன தமிழர் வாழ்வியலில். 

ஆனால் இன்றைய நாளில், தமிழுக்கும் தமிழருக்குமான உரிமைகள்: கல்வியில், ஆட்சியில், நிருவாகத்தில், அறங்கூற்று மன்றத்தில், கோயிலில், இல்லாத நிலையே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய உலகப் பெண்கள் நாளிலும் நமது தமிழ் தமிழருக்கான நாளுக்காக நாம் முன்னெடுக்காமல் இருப்பவை யாவை என்று சிந்திப்போம்.

உலகப் பெண்கள் நாளில் பெண்ணுரிமைக்கான தேவை தமிழ்ப்பண்பாட்டில் எழாத நிலையில்- இன்னும் கனவாகவே இருந்து வரும் தமிழுக்கு, தமிழருக்கான உலக நாள் அமைய உறுதியேற்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,912.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.