Show all

இந்திய-ஐரோப்பிய மொழிகள் ஒரே வேர்ச்சொல்லை கொண்டிருக்கும் போது எழுத்து வடிவத்தில் மட்டும் மாற்றம் ஏன்

இந்திய மொழிகளும் ஐரோப்பிய மொழிகளும் ஒரே வேர்ச்சொல்லை கொண்டிருக்கும் போது எழுத்து வடிவத்தில் மட்டும் தனித்தனியான எழுத்துக்களை கொண்டு இந்திய மொழிகள் எந்த இடத்திலே பிரிய தொடங்கியது? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை ஆகும்.

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்திய ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும், இந்திய மொழிகளில் மட்டும் எழுத்தை கூட்டி ஒலித்தால் சொல் வரும். அதாவது அ ம் மா என்று எழுதி அம்மா என்று படிக்கலாம். ஆனால் ஐரோப்பிய மொழிகளில் ஏ எம் எம் ஏ என்று எழுதி அம்மா என்று படிக்க வேண்டும். 

ஐரோப்பிய மொழிகளில் ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய எழுத்துக்களை மனப்பாடம் செய்தே ஆக வேண்டும். எஸ் யு என் என்று எழுதி சன் என்றே படிப்பார்கள். எஸ் ஓ என் என்று எழுதியும் சன் என்றே படிப்பார்கள். 

ஆனால் இந்திய மொழிகள் அனைத்தும் அடிப்படையில் ஐரோப்பிய மொழிகளே என்றாலும் அவைகள் ஐரோப்பிய மொழிகளுக்கு மாறாக எழுத்து முறையை கொண்டிருப்பது ஏன்? எந்த இடத்திலே பிரியத் தொடங்கியது என்பதற்கான விடையை இங்கே விளக்கியுள்ளோம்.

 

இந்திய-ஐரோப்பிய மொழிகள் சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முதன்மை மொழிக்குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக்குடும்பத்தில் பேரறிமுக மொழிகளான ஆங்கிலம், ஸ்பானிய மொழி, பிரெஞ்சு மொழி, போர்த்துக்கீசம், ஜெர்மன் மொழி, இத்தாலிய மொழி, ரஷ்ய மொழி, பார்சி, ஹிந்தி, உருது என்பனவும் அடங்குவன.

மேற்படி தொடர்பு பற்றிய எடுகோள், வில்லியம் ஜோன்ஸ் என்னும் மொழியியலறிஞரால் முதன் முதலில் முன்வைக்கப்பட்டது. இவர் அக்காலத்தில் மிகத்தொன்மையான மொழிகளாகக் கருதப்பட்ட, லத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழி என்பவற்றுக்கிடையில் ஒற்றுமைகள் இருப்பதைக் கவனித்தார். 

பிரான்ஸ் பொப் என்பவர் தெரிவித்த- லத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக ஆகிய நான்கு மொழிகள் மற்றும் பல பழைய மொழிகள் தொடர்பான முறையான ஒப்பீட்டு ஆய்வுகள், மேற்படி கோட்பாட்டுக்குச் சான்றாக அமைந்தன. 

19ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் இக் குழுவை 'இந்தோ-ஜெர்மானிய மொழிகள்' அல்லது 'ஆரியம்' என அழைத்துவந்தனர். பின்னர் மேற்படி தொடர்பு ஐரோப்பாவின் பெரும்பாலான மொழிகளுக்கும் பொருந்துவது அறியப்பட்டதும், இதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என விரிவாக்கப்பட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக சமஸ்கிருதத்துக்கும், லித்துவேனிய மொழிகளுக்கும் இடையிலான வலுவான தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கூறலாம்.

இவற்றுக்குப் பொதுவான முதல் மொழி முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழி என அழைக்கப்படுகிறது. இது தோற்றம் பெற்ற புவியியல் அமைவிடம் ஊhஹைமட் என அழைக்கப்படுகின்றது, ஆனால் இது தொடர்பாகக் கருத்துவேறுபாடு நிலவுகிறது. ஆர்மீனியாவை உள்ளடக்கிய கருங்கடலின் வடக்கு அல்லது மேற்குப் பகுதிகள் அத்தகைய அமைவிடத்துக்காக முன்மொழியப்படும் முக்கிய இடமாகும்.

இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் துணைக் குழுக்களுள் பின்வருவன அடங்கும்.
இந்திய-ஈரானிய மொழிகள்
இத்தாலிய மொழிகள் (லத்தீன் மொழி, அதன் வழிவந்தவை, ரோமன்ஸ் மொழிகள் என்பன இதில் அடங்கும்)
ஜெர்மானிய மொழிகள் (ஆங்கிலம் அடங்கலாக)
செல்ட்டிய மொழிகள்
பால்ட்டிய மொழிகள்
சிலாவிய மொழிகள்
அல்பானிய மொழி, இது பெரும்பாலும், இல்லீரிய மொழிகள் துணைக்குழுவைச் சேர்ந்த பல வழக்கொழிந்த மொழிகளுள் வைக்கப்படுகிறது.
தராசிய மொழி (வழக்கொழிந்தது)
டாசிய மொழி (வழக்கொழிந்தது)
பிரிஜிய மொழி (பண்டைய பிரிஜியாவின் வழக்கொழிந்த மொழி)
அனத்தோலிய மொழிகள் (வழக்கொழிந்தது, ஹிட்டைடின் மொழி இவற்றுள் குறிப்பிடத்தக்கது.)
தொச்சாரிய மொழிகள் (தொச்சாரியர்களின் வழக்கொழிந்த மொழி)
கிரேக்க மொழிகள்
அருமானிய மொழி
என்பன ஆகும்.

இந்த குடும்பத்தில் முதலாவதாக சொல்லப்பட்ட இந்திய-ஈரானிய மொழிகள் குறித்து புரிந்து கொள்வது நமது கேள்விக்கு நாம் அளிக்க விருக்கிற விடைக்கு தேவையானது ஆகும்.

இந்தோ-ஈரானிய மொழிகள் வழக்கிலிருக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுள்இ கிழக்கு எல்லையில் உள்ளவையாகும். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் சார்ந்த மிகப் பழைய பதிவுகளில் இம் மொழிகளுக்கு நல்ல இடம் உண்டு. யூரல்களின் தென்பகுதியைச் சூழவுள்ள பகுதிகளில் இவை தோற்றம் பெற்றன. இவர்கள் கஸ்பியன் கடலின் கிழக்கிலும்இ தெற்கிலும் ஈரான்இ ஆப்கானிஸ்தான்இ பாகிஸ்தான் போன்ற இடங்களில் குடியேறியபோது மொழி பிரிவடைந்தது. இவர்களுடைய பரவல் தேரின் கண்டுபிடிப்புடன் தொடர்புபட்டிருப்பதுபோல் தெரிகிறது.

இந்தோ-ஈரானிய மொழிகளில் இந்தியாவிற்கு மட்டுமான இந்தோ-ஆரிய மொழிகள்:

சமஸ்கிருதம்
அஸ்ஸாமிய மொழி
வங்காள மொழி
குஜராத்தி மொழி
ஹிந்தி மொழி
மைதிலி மொழி
மராட்டி மொழி
நேபாளி மொழி
ஒரியா மொழி
பாளி
பஞ்சாபி மொழி
உரோமானி மொழி - ஜிப்சிகளின் மொழி
சிந்தி மொழி
திவெயி மொழி
சிங்கள மொழி
உருது

முதன்மைத் தார்டிக் மொழிகள்:
தாமேலி மொழி
தொமாக்கி மொழி
கவார்-பாட்டி மொழி
கலாசா மொழி
காஷ்மீரி மொழி
கோவார் மொழி
கோஹிஸ்தானி மொழி
நிங்கலாமி மொழி
பஷாயி மொழி
பலூரா மொழி
ஷினா மொழி
சுமாஸ்தி மொழி

முதன்மையான நூரிஸ்தானி மொழிகள்:
அஷ்குன் மொழி
கம்விரி மொழி
கதி மொழி (பஷ்காலி)
பிரசுனி மொழி (வசி-வெரி)
ட்ரெகாமி மொழி
வைகாலி மொழி (கலஷா-ஆலா)

முதன்மையான ஈரானிய மொழிகள்:
பாரசீக மொழி
அவெஸ்தான் மொழி (வழக்கொழிந்தது)
பஹ்லவி மொழி - 'மத்திய பாரசீகம்'
பாஷ்தூ மொழி
டாரி மொழி
தாஜிக் மொழி
ஒஸ்ஸிட்டிக் மொழி
குர்தி மொழி
பலூச்சி மொழி
தாலிஷ் மொழி
தாத் மொழி
என்பனவாகும்.

ஆனால் நாவலந்தேயத்தின் (இந்தியா) தொன்மை மொழியான தமிழுக்கும் மேற்கண்ட இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஏனென்றால் தமிழ் தனித்துவமானது. 

இந்திய மொழிகளும் ஐரோப்பிய மொழிகளும் ஒரே வேர்ச்சொல்லை கொண்டிருக்கும் போது எழுத்து வடிவத்தில் மட்டும் தனித்தனியான எழுத்துக்களை கொண்டு இந்திய மொழிகள் எந்த இடத்திலே பிரிய தொடங்கியது? என்கிற கேள்வி விடை 

பாரசீகத்தில் இருந்து கிளம்;பிய பேச்சுமொழியை (எழுதாகிளவி) மட்டுமே கொண்ட ஆரியர்கள்; கைபர் போலன் கணவாய் வழியாக நாவலந்தேயம் வந்தடைந்த போது, தமிழ் எழுத்து மொழியைக் கொண்டிருந்தது. 
 
இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற அத்தனை இந்திய மொழிகளின் எழுத்து முறைக்கும் தமிழே வேர் ஆகும். ஆகவேதான், தமிழ் அல்லாத. இந்திய மொழிகள் அனைத்தும- ஐரோப்பிய மொழிகளும், ஒரே வேர்ச்சொல்லை கொண்டிருக்கும் போது எழுத்து வடிவத்தில் மட்டும் மாற்றமாக எழுதப்பட்டு வருகின்றன. அதாவது தங்கள் வருகை தந்த மண்ணின் தொன்மைக் குடிகளின் மொழியான தமிழ் போல.

பிற மொழிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் எவ்வாறு தனித்துவமானது? என்கிற கீழ்வரும் கட்டுரை செய்தியைப் புரிந்து கொள்வது நமது விடைக்கு வலுசேர்க்கும்.

உலக மொழிகள் எல்லாமே தங்கள் மொழியை அடிப்படையான கட்டமைப்புகளோடு வளர்ப்பதற்கு முன்னாலேயே அடுத்த மொழியைச் சந்திக்க வேண்டிய நிலை அம்மொழிகளுக்கு அமைந்தது. காரணம் உலகினர் எல்லோருமே ஆற்றங்கரையைத் தேடி நாடோடி வாழ்க்கை மேற்கொண்டவர்கள்தாம். ஆகவே உலக மொழிகள் அனைத்திற்கும் ஒன்றோறொன்றான தொடர்புகள் மிகுதியாகவே காணப்படும். 

ஆனால் தமிழ்மொழியோ சங்கம் கண்டு உறுதியான கட்டமைப்பில் வளரும் வரை பிறமொழிகள் இருப்பதை அறியாமலேயே தனித்து வளர்ந்து கொண்டிருந்தது. காரணம் தமிழர் முப்புறம் கடல் சூழ்ந்து நான்காவது புறம் உலகப் பெரு மலை அமையப்பெற்ற நாவலந்தேயம் என்ற பெரும்பகுதியை கொண்டிருந்ததும், தமிழர் ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று தேடி அலையாமல், தாம் வாழ்ந்த நிலம் நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும் மேடாக இருந்தாலும், தாழ்வான பள்ளமாக இருந்தாலும் அதனை வாழுமிடமாக்கிக் கொள்ளும் இயல்பினராய் இருந்தனர் என்பதும் ஆகும்.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்கிற தமிழர்தம் நிலப்பகுப்பும்-
நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே. 
என்கிற புறநானூற்றுப் பாடலும் இதற்கான சான்றுகள்.

உலக இனங்கள் அனைத்திலுமே தமிழருக்கு மட்டுமே நாடு பிடித்து அடுத்த மண்ணில் தம்மக்களை குடியமர்த்தும்  எண்ணம் இருந்ததான வரலாறு இல்லை. இதனாலும் தமிழுக்கு அடுத்த மொழிக்கான தொடர்பு நீண்ட நெடுங்காலம் கிட்டாமலே போனது.

இதனால் உலகில் உள்ள அத்தனை ஆயிரம் மொழிகளிலும் தமிழ்மொழி ஒன்று மட்டுமே மிக நீண்ட காலம் எந்த அயல்மொழிகளின் தாக்கமும் இல்லாமல் வளர்ந்த மொழியாகும். 

உலகத்தில் இருக்கிற அத்தனை மொழி ஆய்வாளர்களும், தமிழ் குறித்த ஆய்வில், ஆழமாக இறங்கும்போது, தடுமாறிப் போவார்கள். தங்கள் மொழியோடு உலக மொழிகளுக்கெல்லாம் பலவகையான தொடர்புகள் இருக்கும்போது, இந்தத் தமிழ்மொழி மட்டும் தனித்து காணப்படுகிறதே என்று குழம்பிப் போவார்கள். 

உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும் உலக மொழிகளில் தமிழ்மொழி குறித்து மட்டும் ஒரே மாதிரியான ஒருமித்த முடிவுக்கு வரமாட்டார்கள்; யானையைத் தடவிப்பார்த்த கண்பார்வை மாற்றுத் திறனாளிகள் போல இதுவரை வௌ;வேறு முடிவுகளையே தந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.   

உலகின் முதல் கடலோடியாக தமிழன்- கடற்கரை அமைந்த நாடுகளுக்கெல்லாம் வணிகனாகச் சென்ற போது, அந்தந்த  மொழித் தொடர்பு தமிழ் வணிகர்களுக்குக் கிடைத்தது. வணிகத்திற்கு வந்த ஆங்கிலேயர் உலகம் முழுவதும் தங்கள் மொழியான ஆங்கிலத்தின் தாக்கத்தை ஏற்படுத்தியது போல, தமிழ் வணிகர்களும் பல கடற்கரை நாடுகளின் மொழிகளில் தமிழின் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதை அந்த நாடுகளின் வரலாறுகளில் தகவல்களாகவும் அருங்காட்சியகங்களில் பொருட்களாகவும் காண முடிகின்றது. 

தமிழ் நான்கு வளர்ந்திருந்த காலக்கட்டத்தில் பல கூட்டங்களாக, இமயமலைக் கணவாய்கள் வழியாக, நுழைந்திருந்த ஆரியர்கள்- தாம் அப்போது பேசிவந்த பல்வேறு மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். 

ஆனால் ஆரியர்கள் பேசி வந்த ஈரானிய ஆப்கானிய மொழிகளுக்கு எல்லாம் எழுத்தைக் கூட்டி ஒலித்தால் சொல்வரும் அமைப்புக்கு எழுத்துக்கள் இன்று வரை கிடையாது. 

உலக மொழிகளில், தமிழைத் தவிர எந்த மொழியிலும், அ ம் மா என்று எழுத்தைக் கூட்டி ஒலித்தால் சொல்வராது. அம்மாவுக்கு எ எம் எம் எ என்பது போல அந்தந்த மொழிகளின் அத்தனைச் சொற்களுக்கும் ஒரேயொருமுறையாவது ஒவ்வொரு சொல்லுக்கும் அமைக்க வேண்டிய எழுத்தைக் (ஸ்பெல்லிங்) கற்றாக வேண்டும்.

இந்தியாவில் ஆரியர்கள் பேசி வந்த மொழிகளின் குடும்ப மொழிகளாக உருவான அத்தனை மொழிகளும், தங்கள் மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். 

ஆரிய மொழிகளின் தாக்கத்தால் தமிழிலிருந்து பிரிந்த தென்னக மொழிகளும் ஆரிய மொழிகளை ஒட்டியே தங்கள் மொழிகளுக்கான எழுத்து வகைமையை- தமிழைப்போல எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் வகையில் அமைத்துக் கொண்டார்கள். உலகில் எழுத்தைக் கூட்டினால் சொல் வரும் மொழிகளை- முப்புறமும் கடலும் நான்காவது புறம் பெருமலையும் பாதுகாப்பாக அமைந்த நாவல 'ந்தேய' ம் என்று தமிழர் அறிமுகப்படுத்த ஐரோப்பியர் ந்தேயா என்று ஒலித்துப் பதிவு செய்து கொண்ட இந்தியாவில் மட்டுமே காண முடியும். 

உலக இனங்கள் அனைத்திற்கும் தனிமனித சான்றோர்களை வழிகாட்டிகளாக முன்னெடுத்த மதங்களே அடிப்படை. ஆனால் உலகில் தமிழர்முன்னோர், வழிவழியாக, தனிமனித சான்றோரை ஆசிரியராக மட்டுமே கொண்டு, அவர்தம் தோளில் அமர்ந்து சிந்தித்திருந்த காரணம் பற்றி, தம்மின் தம்மக்கள் அறிவுடைமையை கொண்டாடினர். 

அதனால் தமிழர்களுக்கு மதம் கிடையாது. மாறாக சங்கம் கண்ட தமிழ் அறிஞர்களின் கூட்டுச் சிந்தனையில் விளைந்த பொருள் இலக்கணம் உண்டு. இப்படி தமிழ்மொழிக்கு மட்டுமேயான தனித்துவத்தை எழுத முனைந்தால் சிறப்பான ஒரு புத்தகமே வடிக்கிற அளவுக்கு சொல்லிக் கொண்டே போகலாம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,334.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.