நாளை, அதிபர் கோத்தபய பதவி விலகியதும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டி அதிபர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது. 28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அண்டை நாடான இலங்கையில் அதிபர் மற்றும் மாற்று தலைமைஅமைச்சர் இருவரும் பதவி விலக கோரி லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய புதிய அரசு அமைப்பது குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள்: நாளை, அதிபர் கோத்தபய பதவி விலகியதும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டி அதிபர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அனைத்து கட்சியினரை உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைந்ததும், தலைமைஅமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை விட்டு விலகி, புதிய அமைச்சர்களிடம் பொறுப்புகளை ஒப்படைப்பர் என, தலைமைஅமைச்சர் அலுவலகம் நேற்று அறிவித்தது இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், அதிபர் கோத்தபய அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கையில், அதிபரின் அதிகாரப்பாட்டு அறிவிப்புகள், பேரவைத்தலைவர் வாயிலாக மட்டுமே வெளியிடப்படும் என, கூறப்பட்டு இருந்தது. அதிபருக்கும், தலைமைஅமைச்சருக்;கும் இடையே கடந்த ஒரு மாதமாக கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், அதன் காரணமாகவே, அதிபர் அலுவலக தரப்பு இப்படியொரு அறிக்கையை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆகமொத்தம் இலங்கையின் விடிவுக்கான வெளிச்சம் எந்த வகையில், எந்தத் திசையில், என்பது தேடலாகமட்டுமே இருந்து வருகிறது.
அடுத்து வரும் செவ்வாய்க் கிழமையன்று, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை புதன்கிழமை நடத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக, பேரவைத்தலைவர் அபெய்வர்தனே தெரிவித்தார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,307.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.