கொரோனா குறுவி சீனாவின் உகான் விலங்குகள் சந்தையில் இருந்து பரவவில்லை அது, உகான் குறுவி ஆய்வுக் கூடத்தின் இயல்அறிவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. என்று மீண்டும் பரபரப்பு கிளப்பியுள்ளது அமெரிக்கா. 18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா பரவியது என்று மீண்டும் அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா குறுவியால் (வைரஸ்) பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறுவித் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19.95 கோடியை தாண்டியுள்ளது. இதற்கிடையில், அமெரிக்க குடியரசு கட்சியின் பாராளுமன்ற வெளியுறவு குழு பேராளர் மைக் மெக்கால், கொரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா குறுவி சீனாவின் உகான் விலங்குகள் சந்தையில் இருந்து பரவவில்லை அது, உகான் குறுவி ஆய்வுக் கூடத்தின் இயல்அறிவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூடத்தில் மனிதரை தாக்கும் வகையில் கொரோனா குறுவியை உருவாக்கவும், இது பற்றி வேறு யாரும் அறியாதபடி மறைப்பதற்கான பணிகளும் நடந்துள்ளன. இதற்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கொரோனா குறுவி 26,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5121 க்கு (12.09.2019) முன்பாகவே, உகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே கசிந்துள்ளதை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் உள்ளன. உகான் ஆய்வகத்தில் அபாயகரமான கழிவு மேலாண்மைப் பிரிவை சீரமைக்க நிதி கோரப்பட்டுள்ளது. இதற்காக, 11 கோடி ரூபாய் ஒதுக்கும்படி ஆய்வக நிர்வாகம் சீன அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஆய்வகம் செயல்படத் தொடங்கி இரு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அபாயகரமான கழிவுகளைக் கையாளும் வசதி தேவைப்பட்டுள்ளது என்று ஐயம் எழுப்பியுள்ளது அமெரிக்கா.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.