Show all

மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடையாம்

வைகோ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. அவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும் அவர் மீது இலங்கையில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி வைகோவை நுழையவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளது மலேசிய அரசு.

     மலேசிய நாட்டிற்குள் நுழைய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய நாட்டிற்கு ஆபத்தானவர் என்ற பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

     விடுதலை புலிகள் அமைப்பை சார்ந்தவர் என்று கூறி வைகோவை மலேசியாவிற்குள் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். மேலும் அவரது எல்லைக்கடவையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

     விமானநிலையத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக அமர வைத்துள்ளனராம். அமர வைத்த இடத்தை விட்டு எழுந்திருக்க கூடாது என்று வைகோவிற்கு மலேசிய அதிகாரிகள் கட்டுப்பாடுகள் வேறு விதித்துள்ளனர்.

     வைகோ இலங்கை குடிமகன் என மலேசிய பதிவுகளில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தாம் இந்திய குடிமகன் என வைகோ கூறியதை மலேசிய அதிகாரிகள் ஏற்க மறுக்க விட்டனர்.

     பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் யங் வைகோவை அனுமதிக்க கூறி எடுத்த முற்சிகளும் தோல்வியைச் சந்தித்துள்ளன. இலங்கையில் வைகோ மீது வழக்குகள் இருப்பதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

     எனவே மலேசியாவிற்குள் அவரை அனுமதிக்க முடியாது என கைவிரித்து விட்டனர். பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வைகோ அந்நாட்டிற்கு சென்றுள்ளார்.

     இதனையடுத்து மலேசியாவிலிருந்து இன்று இரவு 10.45க்கு அவர் மீண்டும் இந்தியாவிற்கு திருப்பியனுப்பப் படுகிறார். சென்னையில் உள்ள மலேசிய தூதரகம் அவர் மலேசியா செல்ல விசா வழங்கியிருந்தது.

     வைகோ போன்று தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறவர்களை திட்டமிட்டு தீவிரவாதிகளாக காட்டுகிற போக்கு-

எப்படி? எப்போது? யாரால் களையெடுக்கப் படும் என்றே தெரியவில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.