பருவநிலை மாற்றம் குறித்து அதிகம் கவலை கொண்டுள்ளேன் என்றும், நானும் ஒரு சூழலியளார்தான் என்றும், ட்ரம்ப் தெரிவித்தார். சீனா, இந்தியா, ரஷ்யாவில் கொட்டும் குப்பைகள் அமெரிக்கா வரை வருவதாகவும் கூறினார். 27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காக எதுவும் செய்யவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருத்தம் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நியூயார்க் பொருளாதாரச் சங்கத்தின் நிகழ்வில் பேசிய டொனால்ட் ட்ரம்ப், பருவநிலை மாற்றம் “மிகவும் சிக்கலான பிரச்சினை” என்று கூறினார். “மற்றவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பல வழிகளில் நான் என்னை ஒரு சூழலியலாளர்” என்றே கருதுகிறேன் என்றும் சொல்லிக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், “சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போதும் நம்மிடம் இருப்பது அமெரிக்கா என்ற சிறிய நிலப்பரப்புதான். ஆனால், அந்த நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள புகைமூட்டத்தைப் போக்கவோ தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்தவோ எதுவும் செய்யவில்லை. லாஸ் ஏஞ்செல்ஸில் இருக்கும் குப்பை போதாது என்று அவர்கள் கடலில் கொட்டும் குப்பைகளும் இங்கே வந்துவிடுகின்றன.” என்றார். “பருவநிலை மாற்றம் குறித்து அதிகம் கவலை கொண்டுள்ளேன். மிகவும் தூய்மையான காற்றை சுவாசிக்க விரும்புகிறேன். அதேபோல மிகச் தூய்மையான நீரையே பருக விரும்புகிறேன்” என்றும் தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,335.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.