பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியை டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட பப்புவா நியூகினி நாடும், தோக் பிசின் மொழியும் பயன்படுத்திக் கொண்டுள்ளது. 08,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5125: பப்புவா நியூ கினியா ஆஸ்திரேலியாவிற்கு அருகில் அமைந்த தீவு நாடாகும். இந்த நாட்டில் 850 மேற்பட்ட பழங்குடி இனமொழிகளும் ஒரு சைகை மொழியும் அங்கீகரிக்கப்பட்டு புழக்கத்தில் இருக்கிறது. உலகிலுள்ள மிகவும் பன்முகத்தன்மையுடைய நாடுகளில் இந்நாடு சிறப்பிடம் பெறுவதாகும். இந்நாட்டின் மக்கள் தொகை வெறுமனே ஐம்பது இலட்சம் மட்டுமே. உள்ள இந்நாடு 850 இற்கும் மேற்பட்ட தொல்குடி மக்களின் மொழிகளும் குறைந்தது அதே எண்ணிக்கையுடைய பழங்குடிக் குழுக்களும் கொண்டுள்ளன. இந்நாடு அதிகமாக கிராமங்களைக் கொண்டது. 18 விழுக்காட்டு மக்களே நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் பாரம்பரிய சமுதாயத்திலேயே வாழ்வதுடன் அன்றாட உணவுத் தேவைக்கு மட்டுமே வேளாண்மையில் ஈடுபடுகிறார்கள். இப்பாரம்பரிய சமுதாயங்களுக்கும் அவற்றின் சந்ததிகளுக்கும் இந்நாட்டின் சட்டங்களினால் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. பன்மொழிப் புலமையர் சுபாசசிந்திரன் அவர்கள், பப்புவா நியூகினி நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றான டோக் பிசின் மொழியில், தமிழ்கொண்டாடும் திருக்குறள் நூலை மொழிபெயர்த்து, தமிழ்மொழிக்கும் டோக் பிசின் மொழிக்கும் உறவுப்பாலம் அமைத்துள்ளார். பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியை டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட பப்புவா நியூகினி நாடும், டோக் பிசின் மொழியும் பயன்படுத்திக் கொண்டுள்ளது. இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வில், அந்நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராப்பே, வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநர் சுசீந்திரன் முத்துவேல், புத்தகத்தை மொழி பெயர்த்த அறிஞர் சுபாஷ் சசீந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இது குறித்து இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி தனது கீச்சுப் பக்கத்தில், 'குறளை டோக் பிசின் மொழியில் மொழி பெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண ஆளுநர் சசீந்திரன் முத்துவேல் மற்றும் சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன். ஆளுநர் சசிந்திரன் தனது பள்ளி படிப்பை தமிழில் கற்று தேர்ந்துள்ளார். சுபா சசிந்திரன், சிறந்த பன்மொழி அறிஞராவார். பப்புவா நியூ கினியாவில், டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் தலைமைஅமைச்சர் ஜேம்ஸ் மராப்பேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,621.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.