Show all

இன்று பிரபாகரன் பிறந்தநாள்! உலகத்தமிழர் பகிர்ந்து ஆறுதல் அடைகின்றனர்; இறுதியாக அவர் ஆற்றிச் சென்ற உரையை

ஆண்டுதோறும் மாவீரர் நாளையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பதினொன்றாம் நாளில், பொதுமக்களுக்கு தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உரையாற்றுவது வழக்கமான ஒன்று. இந்த வகையில் கடந்த தமிழ்தொடர்ஆண்டு 5510ல் (ஆங்கிலம்-2008) பொதுமக்களுக்காக கடைசியாக ஆற்றிய இந்த உரையை, இன்று அவர்தம் 65வது பிறந்த நாளில், உலகத்தமிழர் பகிர்ந்து ஆறுதல் அடைகின்றனர்.

10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆண்டுதோறும் மாவீரர் நாளையொட்டி கார்த்திகை பதினொன்றாம் நாளில், (நவம்பர்-27) பொதுமக்களுக்கு தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உரையாற்றுவது வழக்கமான ஒன்று. இந்த வகையில் கடந்த தமிழ்தொடர்ஆண்டு 5510ல் (ஆங்கிலம்-2008) பொதுமக்களுக்காக கடைசியாக அவர் ஆற்றிய உரை:

எனது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழ தாய்நாட்டின் விடுதலைக்காக தமது இன்னுயிரை தியாகம் செய்து எனது இதயம் எல்லாம் நிறைந்து நிற்கும் என்னுயிர் வீரர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் சிறப்பு நாள்

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்க பிடிக்குள் அடங்கி கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மன்னனாக இருந்த எமது வீரர்களை நினைவு கூறும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் இயல்பாக வாழ வேண்டும் என்ற சத்திய இலக்குக்காக மடிந்த எமது மான வீரர்களை, எமது நெஞ்ச பசுமையில் நிறுத்தி கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இம்மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காக தமது கண்களை திறந்த நிமிடம் முதல், நிரந்தரமாக மூடிய நிமிடம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும், எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புகனை எமது மண்ணிலே, எமது மண்ணுக்காக மாவீரர்கள் புரிந்து இருக்கிறார்கள். இந்த மண்ணில்தான் மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணில்தான் எமது இனம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறார்கள்.

அப்படிப்பட்ட இந்த மண்ணை ஆழமாக காதலித்து, மண்ணுக்காக மடிந்து, மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்து உறங்குகிறார்கள். அவர்கள் இருக்கும் மண், எமக்கே உரித்தான மண். எமக்கே சொந்தமான மண்.

இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கி ஆள சிங்களம் திமிர் கொண்டு நிற்கிறது. தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்கள் எல்லாம் அடங்காத அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறப்பு எடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையில் இருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியில் இருந்து மீளாதவரை சோகத்தின் சுமையில் இருந்தும் விடுபட முடியாது.

மண்ணாசை பிடித்த சிங்களம், அழிவை நோக்கிய ராணுவ பாதையிலேயே இறங்கி இருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. சிங்களத்தின் இந்த கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும்.

எனது அன்பான மக்களே! புவிப் பந்திலே ஈழ தேசம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்ற போதிலும், நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்தி மிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும், பண்பாட்டு வாழ்வையும், வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்

இப்படியான, எங்களது அருமை பெருமைகளை அழித்து தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையை தகர்த்து விட்டு ராணுவ பலத்தால் சிங்களம் தமது இறையாண்மையை திணித்து விட துடிக்கிறது.

இந்த வரலாற்று சூழ்நிலையில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்தக் கோடியில் வளர்ந்தாலும், எமது தேச விடுதலைக்கு உறுதியாக குரல் எழுப்பி எமது விடுதலை இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கி தொடர்ந்து பங்களிக்குமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த சூழ்நிலையில், தேச விடுதலை பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும், எமது அன்பையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன்.

பரவிய லட்சிய தீயில் தம்மையே அழித்து வரலாறு ஆகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் நமது லட்சியத்தை அடைவோம் என உறுதி எடுத்து கொள்வோமாக! புலிகளின் தாகம், தமிழீழ தாயகம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,348.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.