Show all

அதிர்ச்சி! வாடகை செலுத்த முடியாத இலட்சக் கணக்கான அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாகும் அபாயம் நேரிட்டுள்ளது.

17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகம் முழுதும் கொரோனா பெருந்தொற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் மிகுந்த நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவில் சில மாநிலங்களில், 20 விழுக்காட்டு மக்கள் வீட்டு வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. 

வாடகை செலுத்த முடியாமல் தவித்த அமெரிக்கர்களை, அவர்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து வெளியேற்ற நாடு முழுவதும் 11 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு நேற்று முடிவுக்கு வந்த நிலையில், வாடகை செலுத்தாத லட்சக்கணக்கானோர் வீட்டிலிருந்து வெளியேற மறுத்து, அரசிடம் உதவி கோரி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் வீட்டு வாடகை செலுத்துவதற்காக அரசு பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. ஆனால், இந்த நிதியை பயன்படுத்த உச்ச அறங்கூற்றுமன்றம் தடை விதித்தது. இதனால், லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க பாராளுமன்றத்திடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், குடியரசு கட்சி உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் தடையை நீட்டிக்காமலேயே பேரளர்கள் ஒத்திவைக்கப்பட்டது பாதிப்பாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.