துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஜெனிவாவுக்கு தப்பித்து ஓடினார்- இராஜபக்சேவுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த உயர் அதிகாரி 10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில், சிங்களப் பேரினவாத- இராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரித்துவந்த உயர் அதிகாரி- ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்று ஜெனிவாவுக்கு தப்பி ஓடியுள்ளார். இலங்கையில் மைத்திரிபால சிறிசேன நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதிபராக பதவி ஏற்ற போது, முந்தைய மகிந்த இராஜபக்சே ஆட்சிகாலத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணை நிஷாந்த் சில்வா என்ற உயர் அதிகாரியின் தலைமையில் நடைபெற்றுவந்தது. இதற்கிடையில், அந்நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய இராஜபக்சே தனது சகோதரர் மகிந்தா இராஜபக்சேவுக்கு தலைமைஅமைச்சர் பொறுப்பு வழங்கினார். இந்நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற காரணத்தால்- சிங்களப் பேரினவாதிகள்- இராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை விசாரித்து வந்த விசாரணைக்குழுவின் தலைவர் நிஷாந்த சில்வா, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகருக்கு தப்பிச்சென்று விட்டதாக இலங்கை ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டுள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,348.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.