ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு நேற்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆப்கானிஸ்தான் குருத்வாரா மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு நேற்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுப்புக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சீக்கியர்கள், ஹிந்துக்கள் 100 பேருக்கு விரைவாக மின் வருகைஇசைவு வழங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முகமது நபிகள் குறித்த பாஜகவினர் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஹிந்துக்கள், சீக்கியர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,284.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.