பிரதமர் நரேந்திர மோடி நாளை மூன்று நாட்கள் பயணமாக
இஸ்ரேல் செல்கிறார் டெல்-அவிவ் நகரில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்தில் சூலை
4-ஆம் தேதி வந்திறங்கும் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது குழுவினருடன்
நேரில் சென்று வரவேற்கிறார். இதுகுறித்து
மோடி தனது கீச்சு பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாளை, இஸ்ரேல் பயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்தியாவின்
சிறப்பு வாய்ந்த பங்காளி இஸ்ரேல், முதல் இந்திய பிரதமர் இஸ்ரேல் பயணம் செல்கிறார்.
இந்த பயணத்தை நான் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளேன். எனது
பயணத்தில் உலகளவில் சவாலாக இருக்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்து அந்நாட்டு பிரதமர்
பெஞ்சமின் நெதன்யாகூ உள்ளிட்டோருடன் ஆலோசிப்பேன் என்று கூறியுள்ளார். இஸ்ரேல் செல்லும்
முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.