போரிஸ் ஜான்சன் தலைமைஅமைச்சராக இருந்தபோது, நிதியமைச்சர் பொறுப்பில் இருந்த ரிசிசூனக், தற்போது பிரிட்டன் தலைமைஅமைச்சருக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கும் இந்திய மரபுரிமையர் ஆவார். 06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பிரிட்டன் தலைமைஅமைச்சர் பதவிக்கான போட்டியில் இந்திய மரபுரிமையரான ரிசிசூனக் முன்னிலையில் இருக்கிறார். ரிசிசூனக், இந்தியாவின் பேரறிமுகமான தொழிலதிபரும் இன்போஸிஸ் நிறுவனத்தை உருவாக்கியவர்களான நாராயண் மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மருமகன். போரிஸ் ஜான்சன் தலைமைஅமைச்சராக இருந்தபோது, சூனக் பிரிட்டனின் நிதியமைச்சர் பொறுப்பில் இருந்தார். ஜான்சன் பதவி விலகிய பிறகு, கன்மேலாய்வுட்டிவ் கட்சியின் தலைமைக்கான போட்டியில் சூனக் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் தலைமைஅமைச்சரானால், இந்திய மரபுரிமை சேர்ந்த, பிரிட்டனின் முதல் தலைமைஅமைச்சர் என்கிற வரலாறு ஆவார். கன்மேலாய்வுட்டிவ் கட்சிக்குள்ளும் வெளியிலும் பலரும் இவர் தலைமைஅமைச்சர் ஆவதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கணிக்கின்றனர். போரிஸ் ஜான்சன், தலைமைஅமைச்சர் பதவியில் இருந்து விலகியதால், அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க கன்மேலாய்வுட்டிவ் கட்சிக்குள் தற்போது தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்வில் ரிசிசூனக் முன்னிலையில் இருக்கிறார். பல சுற்றுகள் கடந்து இப்போது கடைசியாக இரண்டு பேர் மட்டுமே களத்தில் இருக்கிறார்கள். ஒருவர் ரிசிசூனக், இன்னொருவர் லிஸ்ட்ரஸ். ரிசிசூனக், சவுத்தாம்ப்டனில் பிறந்தவர். அவருடைய பெற்றோர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவின் வௌ;வேறு பகுதிகளில் இருந்து பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தவர்கள். இருப்பினும், இந்தியாவில் இருக்கின்ற பாஞ்சாப் மாநிலத்துக்கும் அவர்களுக்கும் நீண்ட தொடர்பு இருக்கிறது. சூனக்கின் தந்தை யஷ்விர் கென்யாவில் இருந்து பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்துள்ளார். சூனக்கின் தாயார் தான்சானியாவில் இருந்து வந்தவர். தந்தை யஷ்விர் பொது மருத்துவராக வேலை பார்த்தவர். தாயார் உஷா மருந்தகம் ஒன்றை நடத்தி வந்தவர். ஆனால், சூனக் நிதித்துறையைத்தான் தனது எதிர்கால இலக்காகத் தேர்ந்தெடுத்தார். தனியார் கல்வி நிறுவனமான வின்செஸ்டர் கல்லூரியில் படித்த அவர் தனது கோடைக்கால விடுமுறையில் சவுத்தாம்ப்டன் கரி ஹவுஸில் வெயிட்டராவும் வேலை பாத்திருக்கிறார். அதற்குப் பிறகு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தார். மேலும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் வணிகநிருவாகத்தில் முதுவர் பட்டம் பெற்றுள்ளார். ரிசிசூனக், பிரிட்டனின் தலைமைஅமைச்சர் ஆவாரா? மாட்டாரா? என்பதை 20,ஆவணி (செப்டம்பர் 5) அன்றுதான் தெரிந்துக்கொள்ள முடியும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,317.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.