தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் திட்டச் செயல்பாடுகளை உலகத் தமிழ்மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக, தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் திட்டங்கள் வரிசையில் என்று, மௌவல் வெளியிட இருக்கும் தொடர் கட்டுரைகளில், இது முதலாவது கட்டுரை ஆகும். 06,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126: தமிழைத் தரணியெங்கும் கோலோச்சச் செய்யும் வகையில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 1956-இல் இயற்றப்பட்டதற்கிணங்க, தமிழக அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளில் நம் தாய்மொழியாகிய தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்க ஆய்வுப்பணிகள் தமிழ் வளர்ச்சித் துறையால் மேற்கொள்ளப் பெறுகின்றன. தலைமைச் செயலகத் துறைகள் அளவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளர் அவர்களாலும், துறைத்தலைமை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சி இயக்குநராலும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப் பெறுகின்றன. மாவட்ட நிலை மற்றும் சார்நிலை அரசு அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சி மண்டலத் துணை இயக்குநர், மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர் ஆகியோரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஆட்சிமொழித் திட்டம் மிகச் சிறப்பாகச் செயற்படுத்தப்பட உரியவாறு வழிகாட்டப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,141.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.