தைமாதத்தில் கொண்டாடப்படவிருக்கிற, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைக் காண ஒட்டுமொத்த தமிழகமும் ஆர்வமாய் காத்திருக்கிறது. நேற்று தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவிற்கான காப்புக்கட்டு நடந்தது. 30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே, அதிபர் தேர்தல், இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வடமேற்கு பகுதியில், ஓட்டுப்போட சென்ற வாக்காளர்கள் பேருந்து மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியும் கற்களை வீசியும் தாக்கினர். நல்லவேளையாக உயிர்ப்பலியோ, யாருக்கும் பலத்த காயமோ ஏற்படவில்லை. இலங்கையில் இன்று நடக்கும் அதிபர் தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தேர்தலில் 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதற்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சஜித் பிரேமதாசா முன்னாள் அதிபரான மறைந்த ரணசிங்க பிரேமதாசாவின் மகன். கோத்தபய முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர். ராஜபக்சே அதிபராக இருந்தபோது கோத்தபய ராணுவ அமைச்சராக இருந்தார். சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகள், தேர்தலுக்காக, தமிழர்களுக்கு ஏதாவது வாக்குறுதி அளித்து விட்டு, தேர்தலில் வென்ற பிறகு, தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதியே அதுதான் என்பது போல, தமிழர்களுக்கு எதிராகத் துப்பாக்கியை நீட்டுவார்கள் வழக்கமாக. இந்த முறை தமிழர்களுக்கு எந்த வாக்குறுதியும் எந்த வேட்பாளரும் அறிவிக்கவில்லை என்பதாகத் தெரியவருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,338.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.