ஹிந்தி பேசுகிற ஹிந்துக்களுக்கு மத அடிப்படையில் முகமதியர்கள் எதிரிகள். ஹிந்து மதத்தைச் சார்ந்த ஹிந்திக்காரர்களுக்கு மொழி அடிப்படையில் தமிழர்கள் எதிரிகள். ஆனால் முகமதியர்கள் இல்லாவிட்டால் ஹிந்தி மொழி இல்லை? தமிழர்கள் இல்லா விட்டால் ஹிந்து மதம் இல்லை? இது வடஇந்திய மக்களுக்கான வரலாறு 04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில்- இந்திய சமஸ்கிருத அமைப்பில் படித்த பரோஸ் கான் நியமனம், ஒரு பெரிய சலசலப்பை உருவாக்கும் என்றும், மாணவர்கள் அவருக்கு எதிராக தர்ணாவில் அமர்வார்கள் என்றும் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். 1953-54 ஆம் ஆண்டில், முகமது முஸ்தபா கான் என்ற மத்தாஹ் திருத்தப்பட்ட உருது-ஹிந்தி அகரமுதலியை வெளியிட்டார், இது உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹிந்தி அமைப்பால் வெளியிடப்பட்டது. இன்று வரையிலும் கூட உருது-ஹிந்தி மொழிக்காக இதை விட ஒரு சிறந்த அகரமுதலி உருவாக்கப்படவில்லை. பாலி, சமஸ்கிருதம், அரபி, பாரசீகம் மற்றும் ஹிந்தி மொழிகளில் புலமை பெற்றிருந்தார் மத்தாஹ். மேலும் அவர் இந்த மொழிகளிலும் ஹிந்தி அகரமுதலியைத் தயாரித்திருந்தார். ஹிந்தி-உருது அகரமுதலியை மத்தாஹ் உருவாக்கிய பிறகு, உருது-ஹிந்தி அகரமுதலியையும் தயாரிக்க வேண்டும் என்று அவரது ஒரு ஹிந்து நண்பர் மத்தாஹிடம் கேட்டுக்கொண்டார். இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. உண்மையில், நம் நாட்டில், மொழி மற்றும் கல்வித் துறையில், சமஸ்கிருதம், பாரசீகம், ஹிந்தி, உருது ஆகியவற்றை கலந்து பரிமாறிக் கொள்ளும் ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. முகலாய காலத்தில் தாரா ஷிகோ எழுதிய உபநிஷதங்களின் மொழிபெயர்ப்பு மொழிகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் காட்டுகிறது. ஹிந்திக்கும் உருது மொழிக்கும் உள்ள நெருக்கமானது, இலக்கியத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பிரேம்சந்த், ரதன்நாத் சர்ஷர், பிரிஜ் நாராயண் சாக்பஸ்த், பிராக் கோரக்புரி, கிருஷ்ணா சந்தர், ராஜேந்திர சிங் பேடி மற்றும் உபேந்திரநாத் ஆஷ்க் போன்ற முதன்மை எழுத்தாளர்கள் உருது மொழியில் தங்கள் உன்னதமான படைப்புகளை படைத்தார்கள். ஆனால் அவர்கள் ஏன் உருது மொழியில் எழுதுகிறார்கள் என்ற கேள்வி ஒருபோதும் எழுந்ததில்லை. அந்த நேரத்தில் ஹிந்தி மற்றும் உருது மொழியை ஒன்றாகப் படிப்பது இயல்பான விசயம், இன்றும் கூட வெளிநாட்டு அறிஞர்கள் ஹிந்தி மற்றும் உருது மொழியை ஒன்றாகப் படிக்கிறார்கள். உண்மை என்னவென்றால், இரண்டு மொழிகளும் அறுபது விழுக்காடு ஒன்றுதான். “உருது எழுத்தில் எழுதப்படுகிற ஹிந்தி உருது மொழி” “சமஸ்கிருத எழுத்தில் எழுதப்படுகிற உருது ஹிந்திமொழி” முகமதியர் படையெடுப்பால்தாம் சமஸ்கிருத்தில் இருந்து முதன்iமாக ஹிந்தியும், மற்ற வட இந்திய மொழிகளும் தோன்றின. மற்ற வடஇந்திய மொழிகளில், சமஸ்கிருதத்தோடு தமிழ்மொழியின் தாக்கமும் இருக்கும். இன்றும், ஹிந்து குடும்பங்களில் பிறந்த பல உருது கவிஞர்கள் நன்றாக எழுதுகிறார்கள். ஷீன் காப் நிஜாம், ஜெயந்த் பர்மார், சந்திரபான் க்யால் போன்ற பல பெயர்களை பட்டியலிடலாம். உருது மொழியின் மிகப் பரந்த பாரம்பரியத்தில், மீர் மற்றும் காலபி போன்ற கவிஞர்கள் ஹிந்தி அல்லது கடிபோலி சொற்களை பல்வேறு இடங்களில் பயன்படுத்துகின்றனர். இந்திய விடுதலைக்குப் பிறகு- ஹிந்தி ஹிந்துக்களுக்கான மொழியாகவும், உருது முஸ்லிம்களுக்கானதாகவும் மாற்றப்படுவதைக் காண்கிறோம், மோடியும்- இம்ரான்கானும் எளிமையாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியும். எழுதினால் தான் ஒருவருக்கொருவர் புரியாது ஹிந்தியும், உருதுவும் பேச்சு மொழியில் ஒன்றுதாம். எழுத்து மொழிதான் வேறு. ஆனால் மோடியால் அல்லாவை ஏற்றுக் கொள்ள முடியாது. அமித்சாவும்- எழுவரில் ஒருவரான பேரறிவாளனும் ஒரே கோயிலுக்குப் போவார்கள். ஆனால் பேரறிவாளனும் அமித்சாவும் எளிமையாகப் பேசிக் கொள்ள முடியாது. நம் இருவருக்கும் தெய்வங்கள் அனைத்தும் ஒன்றுதானே. என்னைக்கூட ஹிந்து என்றுதானே அறிகின்றீர்கள் என்று பேரறிவாளன் பேசி அமித்சாவுக்கு புரிய வைக்க முடியாததால்தான்- தமிழ் தெரிந்த உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் சதாசிவம் அவர்கள் எழுவரை விடுவிக்கலாம் என்று தெரிவித்தும்- இடைப்படுகிற மொழி தமிழ் என்பதால்- பேரறிவாளன் விடுவிக்கப் படாமல் இருக்கிறார். வடஇந்தியர்களின் மதமான ஹிந்து மதத்தின் வேர் தமிழர் புறப்பொருள் இலக்கணம் காட்டும் உரிப்பொருளே. தமிழ்மெய்யியல் +கட்டுக்கதைகளே ஹிந்துமதம். தமிழர் நடுகல் வழிபாட்டை- தொடக்கத்தில் லிங்கம் என்று நையாண்டி செய்த பார்ப்பனியர்கள்- பின்னாளில் சிவலிங்கம், இராமலிங்கம், பிரபுலிங்கம், புஸ்பலிங்கம், மரகத லிங்கம், மகாலிங்கம், இப்படி ஆயிரம் ஆயிரம் லிங்கங்களை தங்கள் தெய்வங்களாக ஏற்றுக் கொண்டார்கள். முகமதியர்கள் இல்லாவிட்டால் ஹிந்தி மொழி இல்லை? தமிழர்கள் இல்லா விட்டால் ஹிந்து மதம் இல்லை? இது வடஇந்திய மக்களுக்கான வரலாறு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,342.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.