இயற்கையின் அனைத்துள்ளும் மறைந்திருக்கிற நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகளைப் பற்றிய அறிவு இயல்அறிவு (சயின்ஸ்). தமிழ்முன்னோர் நிறுவிய இயல்கணக்கு ஐம்பெரும்பகுதிகளைக் கொண்டது. அவை: அ. அறிந்து கொள்ள வேண்டிய சாதகம் மற்றும் சோதிடம் என்கிற நிமித்தகம்: கிழமை: கருக்கரிவாள் தமிழ்த்தொடர்ஆண்டுக் கணக்கில், நாள்மீன்: கணை. 24நாழிகை 20விநாழி வரை ஓரை: மடங்கல். நடப்பு தை மாதத்திற்கான காலஅளவு: 29நாள், 27நாழிகை, 16விநாழி நடப்பு பருவம்: முன்பனி தமிழ்த்தொடரண்டுக்கு தமிழ்முன்னோர் நிறுவிய கால அளவு: 365நாள், 15நாழிகை, 31விநாழி, 15தற்பரை (ஒற்றைப் பரையடிப்பில் எழும் அதிர்வில் ஓர்அதிர்வுக்கான காலம்) இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,72,228. ஆ. யாரெல்லாம் எப்படியெல்லாம் சாதிக்க முடியும் என்று புரிந்து கொள்வதற்கான கணியம்: பெண்கள்! மருதத்திணை இறைக்கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய பொருளாதார முன்னேற்றத்தோடு, கமுக்கம் சார்ந்த துறைகளில் சாதிக்கலாம். ஆண்கள்! நெய்தல்திணைக் இறைக்கூறு தெய்வம் வருணனின் மாட்சிக்குரிய தொடர்புகளின் ஒத்துழைப்போடு, கலை சார்ந்த துறைகளில் சாதிக்கலாம். பிள்ளைகள்! மருதத்திணை இறைக்கூறு தெய்வம் மன்னனின் மாட்சிக்குரிய பொருளாதார முன்னேற்றத்தோடு, முனைப்பு சார்ந்த துறைகளில் சாதிக்கலாம். கணியக்கலை நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு, அந்த இயல்பை நமது இயல்புக்கு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற கலை ஆகும். இது சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலை ஆகும். இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பு தொடர்நாளின் இயல்பு ஆகியன புரிந்து கொண்டு வெற்றிக்கு முயல்வோம். தனிமனித முன்னேற்றத்திற்குத் தமிழ்முன்னோர் நிறுவிய, இயல்கணக்கின் ஐந்து முன்னேற்றக்கலைகள், 1.இலக்கியம் 2.காப்பியம் 3.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகக்கலை 4.கணியக்கலை 5.மந்திரக்கலை தனிமனித முன்னேற்றத்திற்கான இந்த ஐந்து கலைகளில் முதலாவது இரண்டு முன்னேற்றக்கலைகளும், பலஆயிரம் ஆண்டுகளாக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டே வந்திருக்கிறது. மூன்றாவது முன்னேற்றக் கலையான நிமித்தகத்தில் சிலபல பிராமணியப் புனைவுகளும் கலக்கப்பட்டு நடைமுறையில் பேரளவுப் பயன்பாட்டில் உள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது கலைகள், நீங்கள் கடையில் வாங்கிப் படிக்கிற, அப்படியே முழு நூலாக எல்லாம் இல்லை. அந்தக் கலைகள் தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இனி நாம்தாம் தொகுக்க வேண்டும். தமிழர் வாழ்ந்து கண்டறிந்த பட்டறிவுகளைத் தொகுப்பது மிகக் கடினம். ஆனால் தொகுத்து விட்டால், அதை வைத்துக் கொண்டு உலக மனிதர்களில் எவ்வளவு உயரம் வேண்டுமானால் தமிழன் வளரமுடியும். அந்த முன்னேற்றக்கலைகள் ஐந்து: 1.தனிமனிதர்கள் தங்கள் தங்கள் நோக்கங்களைப் பதிவு செய்கிற இலக்கு கூட்டல் இயம் ஆக, இலக்கியம் 2.பல்வேறு இலக்கியங்களில் முன்மொழியப்பட்ட தமிழ் மற்றும் தமிழின காப்புக்காக கட்டமைக்கப்பட்ட காப்பியம் 3.சாதகம் சோதிடம் என்கிற பலன் அறிகிற நிமித்தகக்கலை. 4.எண்ணிக்கை மாற்றமே இயல்பு மாற்றத்திற்கு காரணம் என்கிற அடிப்படையை நிறுவியுள்ள கணியக்கலை 5.நமக்கான இயக்கத்தை (தலைஎழுத்தை) நாமே வடிவமைத்துக் கொண்டு முன்னேற்றத்தை முன்னெடுக்கிற வாய்ப்புக்கான மந்திரக்கலை எண்ணிக்கைதான் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவதற்கான அடிப்படை என்பது கணியக் கலை முன்னிறுத்தும் முதன்மையான செய்தியாகும். உலகில் இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தனிமங்கள் அனைத்தும் அடிப்படையான நேர்கள் (எலக்ட்ரான்) நிறைகளால் (புரட்டான்) ஆனவைகள்தாம். ஆனாலும் அவைகள் வேறுவேறு தனிமங்களாக இருப்பதற்கு அவைகளில் அமைந்த நேர்கள், நிறைகளின் எண்ணிக்கை மாறுபடே காரணம் என்பதை இயல்அறிவு (சயின்ஸ்) நிறுவியிருக்கிறது அல்லவா? எடுத்துக்காட்டாக தங்கம் அணுவில் உள்ள நேர்கள் நிறைகள் எண்ணிக்கை 79 ஆகும். எண் ஏழுக்குள் உலகச்செலாவணி மதிப்பை தீர்மானிக்கும் இடத்தில் தங்கம் வீற்றிருக்கிற கமுக்கம், தமிழ்முன்னோர் நிறுவிய கணியத்தை வியந்து கொண்டாட காரணமாகிறது. அது போலவே உங்கள் அடையாளமாக இருக்கிற உங்கள் பெயரில் அமைந்த ஒலியன் எண்ணிக்கை உங்களுக்கு ஓர் இயல்பு அடையாளத்தைத் தருகிறது. பெயர் போலவே, நாம் அமைத்துக் கொண்ட நாளுக்கும் இயல்பு உண்டு. கிழமைக்கும் இயல்பு உண்டு. தொடர்நாளுக்கும் இயல்பு உண்டு. முதலாவதாக தமிழன் நிறுவிய கிழமைகள் ஏழும் எண் ஒன்றின், உழைப்பு என்கிற பொது இயல்புக்கு உரியன. இரண்டாவதாக தமிழன் நிறுவிய தமிழ் ஆண்டுக்கணக்கின் அடிப்படையிலான மாத நாட்கள் எண் இரண்டின் நிருவாகம் என்கிற பொது இயல்புக்கு உரியன. மூன்றாவதாக அமைந்த தொடர் நாட்கள் எண் மூன்றின் முனைப்பு என்கிற பொது இயல்புக்கு உரியன. தான்தோன்றி இயக்கம் உடைய நிலம், நீர், தீ, காற்றுடன் தான்தோன்றி இயக்கம் இல்லாத விசும்பு என்கிற ஐந்திர ஆற்றல்களில், தான்தோன்றி இயக்கம் இல்லாது நம்மால் இயக்கம் பெற்று நம்மை முயக்குகிற விசும்பை- பேரறிவு பேரற்றல் என்கின்றனர் தமிழ் முன்னோர். நம்மால் ஒலிக்கப்படும் ஒவ்வொரு ஒலியனும் விசும்பில் இந்த வகைக்கு பதிவாகிறது. இந்த வகைக்கு என்றால்: நம்மை விசும்பு முயக்குவதற்கு, நாம் கொடுத்த இயக்கமாக, நம்மால் ஒலிக்கப்படும் ஒவ்வொரு ஒலியனும் விசும்பில் (கடவுளில்) பதிவாகிறது. இன்றைக்கு கணினியை அவரவர்கள் தரவேற்றம் செய்த மென்பொருள் வகைக்கு இயக்கிக் கொள்ள முடிகிறது இல்லையா? அதுபோல, ஒவ்வொருவரும் அவரவர் விதியை விசும்பு என்கிற வண்தட்டில், மென்பொருளாக எழுதிக் கொள்கின்றனர். என்பதை தமிழ் முன்னோர் சங்கம் வைத்து கூட்டுச் சிந்தனையால் ஆய்ந்து கண்டிருக்கின்றனர். இதைத்தான் திருக்குறள்- இனி இயல்புகள் எவையெவை என்னும் தலைப்பிற்கு வருவோம்:- இயல்பை ஒற்றைச் சொல்லில் நாம் தெரிவித்திருக்கிறோம். அந்த ஒற்றைச் சொல்லின் விரிவாகவே நீங்கள் ஒவ்வொரு நாளும் இயங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். அதைப் புரிந்து கொண்டு இந்த இயல்புகளை உறவாக்கிக் கொண்டு முன்னேறவே தமிழர் அமைத்தனர் கணியக்கலை. 05 என்கிற இன்றைய நாளையும், கருக்கரிவாள் என்கிற இன்றைய கிழமையையும், 18,72,228 என்கிற இன்றைய தொடர் நாளையும் வெற்றிக்குத் துணையாக்கிக் கொள்ள, நாளின் இயல்பாகிய கலை, கிழமையின் இயல்பாகிய கமுக்கம், தொடர்நாளின் இயல்பாகிய முனைப்பு இன்றைய மாட்சி இயல்புகள் என்பதை புரிந்து கொண்டு முயல உங்களுக்கு வெற்றி எளிதாகும். இன்று சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு களம் இறங்குகிறவர்கள், இதைப் புரிந்து கொண்டு சாதிக்க ஐந்திணைக்கோயில் வாழ்த்துகிறது. இன்றைய கிழமையை (கமுக்கம்) உங்கள் தாய் போலவும், நாளை (கலை) உங்கள் தந்தை போலவும், தொடர்நாளை (முனைப்பு) உங்கள் குழந்தை போலவும் பாடாற்ற வேண்டும். ஏனெனில், இயல்புகள் ஒன்று தாய், இரண்டு தந்தை, மூன்று குழந்தை, நான்கு குடும்பம் என்றே வரிசை கட்டுகின்றன. கணியக் கலை அடிப்படையில் இன்றைய வெற்றிக்கு முனைகிறவர்கள்: 1. இன்று கிழமை கருக்கரிவாள் என்கிற நிலையில்- இன்றைய கிழமையின் மாட்சி இயல்பு கமுக்கம், ஆகவே கமுக்கத்தை உங்கள் அம்மா என்று புரிந்து கொண்டு முனைக. 2. இன்று நாள் 05 என்கிற நிலையில்- இன்றைய நாளின் மாட்சி இயல்பு கலை. ஆகவே கலையை உங்கள் அப்பா என்று புரிந்து கொண்டு முனைக. 3. இன்று தொடர்நாள் 18,72,228 என்கிற நிலையில்- இன்றைய தொடர்நாளின் மாட்சி இயல்பு முனைப்பு, ஆகவே முனைப்பை உங்கள் பிள்ளையாக என்று புரிந்து கொண்டு முனைக. இ.தொடர்பு கொள்ள: பெரும்பாலும் உங்கள் விருப்ப எண்ணே உங்கள் பெயர் எண்ணாகப் பொருந்தியிருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள். உங்கள் விருப்ப எண்ணின் இயல்புகளை விரிவாகத் தெரிந்து கொள்ளவும், ஐந்திணைக்கோயிலின் வாழ்த்துக்களைப் பெறவும், கீழே குறித்துள்ள மின்அஞ்சல் முகவரியில் உங்கள் விருப்ப எண்ணை தெரிவித்திடுங்கள். உஙகள் பெயர் எண்ணை அறிந்து கொண்டு, உங்கள் பெயர் எண்ணின் இயல்புகளை விரிவாகத் தெரிந்து கொள்ளவும், ஐந்திணைக்கோயிலின் வாழ்த்துக்களைப் பெறவும், கீழே குறித்துள்ள மின்அஞ்சல் முகவரியில் உங்கள் பெயரைத் தெரிவித்திடுங்கள். மின்அஞ்சல் முகவரி: kumarinadanr@gmail.com
நான்மறைகள் இயங்கும், நிலம், நீர், தீ, காற்று விசும்பு என்கிற ஐந்திரங்ளில் ஐந்தாவதான விசும்பைப் பற்றிய கணிப்பு இயல்கணக்கு. இயல்கணக்கை உலகினர் இன்றுவரை அறிய முயலவில்லை.
1.இலக்கியம் 2.காப்பியம் 3.சோதிடம் சாதகம் என்கிற நிமித்தகம் 4.கணியம் 5.மனதில் மாண்புகளைக் குவிக்கும் கலையான மந்திரம்.
நாளும், மாதமும், ஆண்டும்: 05, தை, தமிழ்த்தொடராண்டு-5126.
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்
என்று தெரிவிக்கிறது.
ஒலியன் 1க்கு இயல்பு உழைப்பு
ஒலியன் 2க்கு இயல்பு நிருவாகம்
ஒலியன் 3க்கு இயல்பு முனைப்பு
ஒலியன் 4க்கு இயல்பு பயணம்
ஒலியன் 5க்கு இயல்பு கலை
ஒலியன் 6க்கு இயல்பு தொழில்நுட்பம்
ஒலியன் 7க்கு இயல்பு கமுக்கம்
ஒலியன் 8க்கு இயல்பு புகழ்
ஒலியன் 9க்கு இயல்பு போரியல்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.