அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க படையைச் சேர்ந்த 80 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேஸ் தலைமைஅமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானை எச்சரித்துள்ளார். 24,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் ஈரான் அரசும் மக்களும் அமெரிக்கா மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க படையைச் சேர்ந்த 80 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேஸ் தலைமைஅமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஈரானுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேல தலைமைஅமைச்சர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். எங்கள் மீது தாக்குதல் நடத்தும் எவராயிருந்தாலும் பதில் அடியை பெறுவார்கள் என்று கூறியுள்ளார். இவர்தான், மூன்று மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேல் உள்நாட்டு சிக்கலின் போது “என்ன நடந்தாலும் பதவி விலக முடியாது, வலதுசாரி கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார். உலகம் முழுக்க தற்போது இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே என்று வலதுசாரி தலைவர்கள்தான் ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள். உலகம் முழுக்க தற்போது வலதுசாரி தத்துவம் தலையெடுத்து வளர்ந்து இருக்கிறது. இதற்கு எல்லாம் பிள்ளையார் சுழி போட்டது என்று பார்த்தால் அது இஸ்ரேல் தலைமைஅமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகுதான். உலகின் மிக முதன்;மையான வலதுசாரி தலைவராக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பார்க்கப்படுகிறார். ஆனால் தற்போது அவரின் ஆட்சி கடுமையாக சிக்கலில் மாட்டி தவித்து வருகிறது. கடந்த ஓராண்டாகவே இஸ்ரேலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. இஸ்ரேலில தலைமைஅமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு நிறைய ஊழல்களை செய்துவிட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. தலைமைஅமைச்சர் பெஞ்சமின் நெதன்யாகு மீது 6 க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் இருக்கின்றன. அங்கு இருக்கும் ஊடகங்களுக்கு லஞ்சம் கொடுத்தது, வெளிநாட்டு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தது, நிறைய பரிசு பொருட்களை கோடிக்கணக்கில் வாங்கியது என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. சில செய்தி நிறுவனங்களை மிரட்டினார், பல கோடி அரசு நிதியை தனக்காக செலவு செய்து கொண்டார் என்று இவர் மீது புகார் உள்ளது. இந்த புகார்களுக்கு எதிராக இவர் மீது முதல் தகவல் அறிக்கை, இரண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 மாதமாக இருந்த பிரச்சனை மூன்று மாதங்களுக்கு முன்பு பெரிதாக உருவெடுத்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் தொடங்கி பல முதன்மை அதிகாரிகள், எதிர்க்கட்சிகள் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்கள். ஆனால் அது எப்போதும் நடக்காது. என்னை விசாரிக்க வேண்டும் என்று நினைத்தவர்களை நான் விசாரிக்க போகிறேன். ஆம், விரைவில் சில முதன்மைத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். ஆனால் கண்டிப்பாக பதவி விலக மாட்டேன் என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார். தன் உள்நாட்டு சிக்கலுக்கு, அமெரிக்க ஈரான் சிக்கலைப் பகடைக்காயாக்கிக் கொள்ளப் பார்க்கிறாரோ நெதன்யாகு. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,391.
ஆனால் தற்போது பெஞ்சமின் நெதன்யாகு தான் பதவி விலக முடியாது என்று உறுதியாக அறிவித்துவிட்டார். என்னுடைய ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பொய்யான புகார்களை அளிக்கிறார்கள். இதில் அண்டை நாட்டின் சதி திட்டங்கள் இருக்கிறது. வலதுசாரி அரசை நீக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.