வட இந்தியர்கள் யாரும், ஆளும் வகைக்கு, தமிழ்நாட்டில்- இன்று இந்த வினாடி வரை காலடி எடுத்து வைத்ததாக வரலாறு இல்லை. எனவே ராமன் பெரும்படையோடு, தமிழ்நாட்டைத் தாண்டி இலங்கைக்கு பயணம் என்பதே சாத்தியம் இல்லை. அவ்வாறான நிலையில் குமரிக்கடலில் பாலம் கட்டியதாக சொல்லுவது, தமிழ்நாட்டின் வரலாற்றைத் திரிக்கும் நோக்கத்திற்கான மாபெரும் புளுகு ஆகும். 19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழ்நாட்டின் தெற்கே அமைந்த குமரிக்கடலில் பாம்பன் தீவுகள் அருகே ராமர் பாலம் உள்ளதாகவும் அதை இந்தியாவின் தொல்அடையாளமாக அறிவிக்க வேண்டும் என்றும் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, பதிகை செய்த மனு மீது விரைவில் விசாரணை நடத்தப்படும் என உச்சஅறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பாம்பன் தீவுகளுக்கும் இலங்கைக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் ஆன திட்டுகள் தொடர்ச்சியாக உள்ளன. இந்தத் திட்டுகள்; ஆதாம் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் ராமாயணக் கதையின் அடிப்படையில் இது ராமர், அணில் மற்றும் அனுமான் உதவியுடன் இலங்கைக்குக் கட்டிய பாலம் என்கிற கருத்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே கடலை ஆழப்படுத்தி, கப்பல்போக்குவரத்தை எளிமைப்படுத்தும் நோக்கத்திற்கானது சேது கால்வாய் திட்டம் ஆகும். இந்த ராமர் பாலமானது, சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் பேசுபொருளாகும் போதெல்லாம் விவாதத்துக்குரியதாகியது. சேது கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தீவிரம் காட்டியது. சுற்றுச் சூழல் அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. சேதுக்கால்வாய் திட்டத்தால் ராமர் கட்டிய பாலம் சேதமடையும்; ஆகையால் சேதுக் கால்வாய் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முன்னர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இதனால் சேது கால்வாய் திட்டத்துக்கு தடையும் விதிக்கப்பட்டது. இதற்குப் பின்னர் ராமர் பாலத்தை இந்தியாவின் தொல்அடையாளமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியன் சுவாமி மனு ஒன்றையும் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்தார். சுப்பிரமணியன் சுவாமி பதிகை செய்த மனு நீண்டகாலமாக கிடப்பில் இருந்தது. இம்மனு மீதான விசாரணை கடந்த மாதம் இறுதியில் நடைபெற இருந்தது. ஆனால் விசாரணை நடைபெறவில்லை. இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும்;, விசாரணைப் பட்டியலில் வழக்கும் இடம்பெறும் என்று உச்சஅறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் என்.வி.ரமணா தெரிவித்திருக்கிறார். சில புவியியல் வல்லுனர்கள் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதென்று கருதினாலும், பலர் இப்பாலம் இயற்கையாகவே தோன்றியதாக கூறுகின்றனர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு உச்சஅறங்கூற்றுமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ஒரு அங்கமான விண்வெளி பயன்பாட்டு மையம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இப்பாலம் இயற்கையாக தோன்றியதாக கூறுகிறது. மேலும், இந்திய நிலப்பொதியியல் கழகம் நடத்திய ஆராய்ச்சியின் பகுதியாக, இப்பாலத்தின் நீரில் மூழ்கிய பாறைகளில் பல இடங்களில் ஆழமான துளையிட்டு கிடைத்த பாறை மாதிரிகளை ஆய்வு செய்ததில், செயற்கையாக மனிதனால் கட்டப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. வட இந்தியர்கள் யாரும், ஆளும் வகைக்கு, தமிழ்நாட்டில் இன்று இந்த வினாடி வரை காலடி எடுத்து வைத்ததாக வரலாறு இல்லை. எனவே ராமன் பெரும்படையோடு, தமிழ்நாட்டைத் தாண்டி இலங்கைக்கு பயணம் என்பதே சாத்தியம் இல்லை. அவ்வாறான நிலையில் குமரிக்கடலில் பாலம் கட்டியதாக சொல்லுவது மாபெரும் புளுகு ஆகும். தமிழ்நாடு- வரலாற்றுக் காலத்துக்கு முன்பு முதல் மக்கள் வாழும் உறைவிடமாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாறும் தமிழ் மக்களின் நாகரீகமும் பண்பாடும் உலகின் மிகப் பழமையானவைகளில் ஒன்றாகும். முந்தைய பழங்கற்காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ்நாட்டின் வரலாறு முழுவதிலும், இந்தப் பகுதியானது பல்வேறு புறக் கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைந்து இருந்து வந்துள்ளது. வரலாற்றில் ஒப்பீட்டளவில் குறுகிய காலப் பகுதிகளைத் தவிர்த்து, பிற காலகட்டங்களில் தமிழ்நாடு பகுதி புற ஆக்கிரமிப்புகள் எதுவுமின்றி சுதந்திரமாக இருந்து வந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ பேரரசுகளே நான்கு தொல் பழந் தமிழ் பேரரசுகளாக இருந்தன. இவர்கள் தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் மொழி ஆகியவற்றைக் கொண்டு இந்தப் பகுதியை ஆட்சி செய்தனர், இதனால் உலகில் அழியாமல் வழக்கத்திலிருந்த சில பழமையான இலக்கியங்களின் வளர்ச்சி சாத்தியமானது. இவர்கள் ரோமப் பேரரசுடன் அதிகப்படியான கடல்வழி வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இப்பகுதியின் தலைமைக்காக இந்த மூன்று வம்சத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவருக்கொருவர் தொடர்ச்சியாக போரிட்டுக் கொண்டனர். மூன்று பேரரசுகளும் மரபுரிiயாக ஆட்சி செய்துவந்த இந்தப் பகுதியை மூன்றாம் நூற்றாண்டில் நுழைந்த களப்பிரர்கள் சில நூறாண்டுகள் தமிழ்நாட்டின் சில பகுதிளை ஆண்டனர். இவர்களும் கொடுந்தமிழ் நாடுகளின் அரசர்களே அன்றி வடஇந்தியர்கள் இல்லை. பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் மீட்டெழுந்து களப்பிரர் ஆதிக்கத்தை முறியடித்து தங்களின் மரபுரிமைப் பேரரசுகளை மீண்டும் நிலைநாட்டினர். வீழ்ந்திருந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களையும் பாண்டியர்களையும் தோற்கடித்து, தங்களது பெரும் சக்தியாக எழுச்சியடைந்து கிட்டத்தட்ட தெற்கு தீபகற்பப் பகுதி முழுவதும் தங்கள் பேரரசை விரிவுபடுத்தினர். வங்காள விரிகுடா பகுதியில் சோழப் பேரரசு சுமார் 3,600,000 சதுர கி.மீ. அளவிற்குப் பரவி இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் இருந்த சிறீவிஜயா பேரரசு பகுதியையும் சோழரின் கடற்படை கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. மூன்று பேரரசுகளின் வீழ்ச்சி காரணமாக, தமிழ்நாடு விஜயநகரப் பேரரசின் ஒரு அங்கமாக மாறியது. விஜயநகரப் பேரரசின் கீழ் தெலுங்கு பேசும் நாயக்கர் ஆட்சியாளர்கள் தமிழ்ப் பகுதியை ஆட்சி செய்தனர். ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகை பதினேழாம் நூற்றாண்டின் போது நிகழ்ந்தது. இவ்வாறு வணிகம் செய்ய வந்தவர்கள் இறுதியில் இந்தப் பகுதியின் ஆட்சியாளர்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணம் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இப்பகுதி பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டது. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு மொழியியல் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,330.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.