போர் தொடுத்தாலும் நம்மை கட்டுப்படுத்தும் ஆற்றல்
இந்திய ராணுவத்திடம் இல்லை என்று சீன நாட்டு இணையதளம் ஒன்று தகவலை பரப்பி வருகிறது.
சிக்கிம் மாநிலத்தை ஒட்டி இந்தியா-சீன எல்லை அமைந்துள்ளது. வரையறுக்கப்படாத இந்த எல்லையில்
டோக்லாம் பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கு முன் சீன ராணுவத்தினர் சாலை போடும் பணியில்
ஈடுபட்டனர். இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால்
இந்திய- சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் போர் தொடுக்கும் நடவடிக்கையை
சீன ராணுவம் எடுக்க வேண்டியிருக்கும் என்பது போன்ற மறைமுக மிரட்டல்களும் விடுக்கப்படுகின்றன.
திபெத்தின் ஒரு பகுதியான டோக்லாம் என்ற பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி நுழைந்ததாகவும்
சீனா குற்றம்சாட்டியது. மக்கள்
விடுதலை ராணுவம் என்ற அமைப்பின் இணையதளத்தில் “நிபுணர்கள் நாங்கள்- போரில் எங்களை
வெல்ல யாரும் இல்லை” என்ற
தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதை வாங் தேஹூவா என்பவர் செவ்வாய்க்கிழமை
எழுதியுள்ளார். அப்போது 1967-ஆம் ஆண்டு சிக்கிம் பகுதியில் நாது லா என்ற பகுதியில்
நடைபெற்ற போரை நினைவுக்கூர்ந்துள்ளார். அந்தக்
கட்டுரையில் அவர் மேலும் கூறுகையில் சிக்கீம் பகுதியில் கடந்த 1967-ஆம் ஆண்டு இந்திய
ராணுவத்துடன் சீன ராணுவம் போர் தொடுத்தது. அப்போது இந்திய ராணுவ படைக்கு எதிராக அழிவை
ஏற்படுத்தக் கூடிய இரு பதிலடிகளை சீனா கொடுத்தது. இந்தியாவிடம் ஆற்றல் இல்லை அச்சமயம்
இந்தியாவில் ஆற்றல் கொண்ட வீரர்கள் யாரும் இல்லை. கடந்த சில பத்தாண்டுகளில் நமது சீன
ராணுவம் நவீனமயமாக்கலில் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை அடைந்த போதிலும் கடந்த
1967-ஆம் ஆண்டு இருந்த நிலையிலேயே இந்தியா ராணுவம் முன்னேற்றம் ஏதும் இன்றி உள்ளது.
இந்த
விவகாரத்தில் சீனாவை எதிர்க்கும் உறுதியில் உள்ள இந்தியர்கள் ஒரு உண்மையை புரிந்து
கொள்ள வேண்டும். எல்லை விவகாரத்தில் ராஜீய ரீதியிலோ அல்லது ராணுவ தொடர்பு ரீதயிலோ அல்லது
இந்த விவகாரத்தை முறையாக கையாளா விட்டாலோ, மறுபடியும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும்
இடையே மீண்டும் போர் எழலாம் என்பதில் சந்தேகமே இல்லை. குறைவாக எடை போட வேண்டாம் இந்தியர்களின்
பலத்தையும், சீனாவின் உண்மை பலத்தையும் இந்தியர்கள் தவறாக மதிப்பிட வேண்டாம். அவ்வாறு
நினைத்தால் சேதாரம் இந்தியாவுக்குத்தான். இவ்வாறு அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.