இன்னும் ஐந்தே ஆண்டுகளில் பெட்ரோல் விலை லிட்டர்
ரூ.30க்கு வந்துவிடும் என அமெரிக்க ஆய்வாளர் டோனி செபா கூறியுள்ளார். இதுகுறித்து
அவர் மேலும் கூறியதாவது: புதிய தொழில்நுட்பங்கள் பெட்ரோலிய பொருட்கள் மீதான சார்புத்தன்மையை
குறைத்துவிடும். அடுத்த பத்தாண்டுகளில் இது நடந்தே தீரும். எனவே பெட்ரோலிய பொருட்ககள்
மீதான விலை குறையும். சுயமாக டிரைவ் செய்யும் மின்சக்தியில் இயங்கும் கார்கள் வருங்காலத்தில்
பெருகிவிடும். மேலும் இந்த வகை கார்கள் விலையும் குறைவாகவே இருக்கும். 2030ம்
ஆண்டுக்குள் 95 விழுக்காடு மக்கள் சொந்தமாக கார்கள் வைத்துக்கொள்வதைவிட இப்படியான தனிஆள்
கார்களை வைத்துக்கொள்வதை விரும்புவார்கள். நடுவண்
மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2030க்குள் மின்சக்தியில் இயங்கும் கார்கள் இந்தியாவில்
பெருகும் என கூறியிருந்த நிலையில் டோனியும் இவ்வாறு தெரிவித்துள்ளது நம்பகத்தன்மையை
அதிகரித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.