அமெரிக்காவால் கொல்லப்பட்ட சுலைமானியின் இறுதிச் சடங்கு நிகழ்வை முன்னிட்டு- ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொலைக்காட்சி- அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு, 80 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்து ஒட்டுமொத்த உலகையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது 22,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் பணம் வழங்கப்படும் என்று ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள சர்வதேச விமானநிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்பு படையின் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மேலும், உளவுப் பிரிவுத்தலைவர் உள்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த காசிம் சுலைமானியின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். சுலைமானியின் இறுதிச் சடங்கு நிகழ்வு அந்நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி தொலைக்;காட்சியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்வின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு 80 மில்லியன் டாலர் வழங்கப்படும். ஈரானில் 80 மில்லியன் மக்கள் வசிக்கும் நிலையில், அதனைக் கணக்கில் கொண்டு 80 மில்லியன் டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,389.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.