ஊருக்குள் நுழைந்து, மக்களுக்கு அச்சத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிற பாம்புகளைப் பிடித்து, காட்டில் விட்டுவிடும் முன்னெடுப்பில் வங்கதேசம் ஜஹாங்கிர்நகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் களம் இறங்கி சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனர். 20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: ஊருக்குள் நுழைந்து, மக்களுக்கு அச்சத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிற பாம்புகளைப் பிடித்து, காட்டில் விட்டுவிடும் முன்னெடுப்பில்- வங்கதேசம் ஜஹாங்கிர்நகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவ அமைப்பினர், கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 1500 பாம்புகளை தடம்மாற்றியுள்ளனர். அதோடு, பாம்புகள் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர். இந்த வகைக்கு- வங்காள நாட்டின் மக்களை இணைக்கும் விதமாக இவர்கள் ஒரு மாணவ அமைப்பை உருவாக்கியுள்ளனர். மூட நம்பிக்கைகளை உடைப்பதும் இவர்களது பணிகளில் ஒன்றாக இருக்கிறது. இவர்களது அமைப்பு தற்போது வங்கதேசத்தில் 500 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதில் 50 பேர் நேரடியாகவே பாம்புகளை மீட்கும் பணியில் இயங்கி வருகின்றனர். பாம்புகளை கையாளத் தொடங்கும் முன் அவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வகைக்கு தமிழ்நாடு முன்னோடியாக விளங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழ்நாட்டில், இருளர் இன மக்களின் பரம்பரை தொழில் பாம்பு பிடிப்பதாகும். தமிழ்நாடு தொழில், வணிகத் துறையின் கீழ் நாற்பத்திநான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரம் அடுத்த வடநெம்மெளி பகுதியில் இருளர் பாம்பு பிடிப்பவர் தொழில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. பாம்பு கடி நஞ்சு முறிவு மருந்து தயாரிக்கும் பணி, இந்தக் கூட்டுறவு சங்கம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு பாம்புகள் இனப்பெருக்கம் காலமாக அறிவித்துள்ள ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதங்கள் தவிர மற்ற காலங்களில் பாம்புகளை பிடிக்க அனுமதி அளித்து வந்தது. இந்நிலையில் நஞ்சுமுறிவு மருந்து தயாரிக்க நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருட்டை பாம்பு இனங்கள் பயன்படுத்தப்படும் நிலையில் ஆண்டிற்கு 13 ஆயிரம் பாம்புகள் பிடிக்க உயர்அறங்டடுகூற்றுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து வனத்துறை 8000 பாம்புகள் பிடிக்க அனுமதி அளித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டிற்கு 5 ஆயிரம் பாம்புகளை பிடிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அத்துடன் தாமதமாக பாம்பு பிடிக்க அனுமதி கிடைத்ததால் இருளர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. சராசரியாக ஆண்டிற்கு 500 கிராம் நஞ்சுமுறிவு மருந்து தயாரிக்கப்பட்டு இதன் மூலம் ஒன்றரை கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதுடன், அரசுக்கு பங்கு தொகையாக 3 முதல் 4 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதனால் பாம்பு நஞ்சு முறிவு மருந்துக்கான பாம்பு பிடிக்க வனத்துறை அனுமதிக்காமல் தாமதப்படுத்துவதால், உடனடியாக அனுமதி வழங்க வேண்டுமெனக் இருளர் இன மக்கள் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து- இருளர் இன மக்கள் பாம்பு பிடிக்க மூன்று மாதங்களுக்கு முன்பு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நஞ்சுமுறிவு மருந்துக்கான பாம்புகளை பிடிக்க இருளர் பாம்பு பிடிப்பவர் தொழில் கூட்டுறவு சங்கத்திற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருளர் இன மக்கள் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதி வழங்கியதோடு, அதிகாரப்;;;பாடான அரசாணையையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,299.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.