மாதந்தோறும் 200கோடி பேர் உலகம் முழுவதும் முகநூலைப்
பயன்படுத்துகிறார்கள் என்று மார்க் மார்தட்டி சிறிது நாள்களே ஆன நிலையில், தற்போது
அதை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் பட்டியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் ஒன்று
நிகழ்ந்துள்ளது. 24 கோடி
பேர் எங்கள் நாட்டில் முகநூல் பயன்படுத்துகிறார்கள் என்ற எட்டிப்பிடிக்க முடியா உயரத்தில்
இருந்த அமெரிக்காவைத் தற்போது இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்காவை
விட பத்து இலட்சம் அதிகம் அதாவது 24 கோடியே பத்து இலட்சம் என்ற சாதனையை இந்தியா எட்டி
முதல் இடம் பிடித்துள்ளது. கடந்த
6 மாதங்களில் மட்டும் முகநூல் பயன் படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில் 27 விழுக்காடு அதிகமாகியுள்ளது. இதில் பாதிக்கும் மேல் 25 அகவைக்கும்
கீழே இருப்பவர்கள்! மொத்த எண்ணிக்கையில் இங்கு நான்கில் மூன்று பங்கு ஆண்கள்தான். ஆனால்
அமெரிக்காவிலோ 54 விழுக்காடு பெண்கள்தான் என்று கூறி ஆச்சர்யப்படுத்துகிறார்கள்
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.