Show all

பாதுகாப்பை முன்னெடுப்போம்! “இஸ்ரேல், பாலஸ்தீனம் செல்லாதீர்கள்” அமெரிக்க மக்களுக்கு அரசு எச்சரிக்கை

சுலைமானி கொலையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நீடிப்பதால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் செல்ல வேண்டாம் என அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்ட காரணம் முன்னிட்டு.
இந்த நிலையில் சுலைமானி கொலையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நீடிப்பதால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் செல்ல வேண்டாம் என அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் உச்சநிலை பதற்றத்தால் அங்குள்ள அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவுகிறது. எனவே அமெரிக்க மக்கள் இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளுக்கு பயணம் செய்வதில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக ஜெருசலேம், மேற்குகரை மற்றும் காசா ஆகிய பகுதிகளுக்கு செல்வதை அமெரிக்க மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள பயண அறிவுரை அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,392.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.