கனடா நாட்டின்
150வது விடுதலை நாளை முன்னிட்டு அந்நாட்டு நாட்டுப்பண்ணை தமிழில் வெளியிட்டு அந்நாட்டு
அரசு கவுரவித்துள்ளது. வழக்கமாக தமிழர் பண்பாட்டை கவுரவிக்கும் கனடா அரசு தற்போது அந்நாட்டு
நாட்டுப்பண்ணை தமிழில் வெளியிட்டு தமிழுக்கு மகுடம் சூட்டியுள்ளது. கனடா நாட்டில் தமிழ்மொழிக்கு என்று எப்போதும்
தனி மரியாதை உண்டு. தமிழர்களின் கலாச்சார திருவிழாக்களை கொண்டாடுவது, பொது அறிவிப்புகளைத்
தமிழில் வெளியிடுவது என்று உலகத் தமிழர்களை கனடா அரசு மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், கனடா நாட்டின் 150வது சுதந்திர தினம்
வருகிற ஜூலை 1ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழ் மொழி உட்பட மொத்தம் 12 மொழிகளில்
கனடா நாட்டுப்பண் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், அரபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம்,
ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், டாகாலோக்
ஆகிய 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே
இருந்த கனடா நாட்டுப்பண், தற்போது நாடு தழுவிய நிலையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும்
மற்றும் பேசப்படும் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கனடா நாட்டுப்பண்ணின்;
தமிழ்மொழி ஆக்கம் கவிஞர் கந்தவனம் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சல்லிக்கட்டுக்கு
ஆதரவு தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின், தமிழர்களின் கலாச்சார திருவிழாவான பொங்கலுக்கு
தமிழில் வாழ்த்து தெரிவித்தார். தமிழர்களின் சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளையும்
விளையாடி உலகத் தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் தற்போது கனடா நாட்டு நாட்டுப்பண்ணை
தமிழில் வெளியிடச் செய்து தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் மிகுந்த மரியாதை கொண்டவர்
என்பதை இதன்மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். நம்ம தமிழக முதல்வர் பழனிச்சாமி- குடும்;ப அட்டைக்கு
பொருள்கள் வாங்கும் போது நம் செல்பேசிக்கு வந்து கொண்டிருந்த தமிழ் குறுந்தகவலை இப்போது
ஆங்கிலத்தில் அனுப்பத் தொடங்கி விட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.