புவி எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சுற்றுச்சூழல் சிக்கல்களுக்குத் தீர்வு காண்போரை ஊக்கப்படுத்தும் வகையில் மாபெரும் பரிசுத்திட்டத்தை பிரிட்டன் இளவரசர் வில்லியம் அறிமுகப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு நாடும் இது போன்று பரிசுத்திட்டம் அறிவிக்கலாமே. 17,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புவி எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சுற்றுச்சூழல் சிக்கல்களுக்குத் தீர்வு காண்போரை ஊக்கப்படுத்தும் வகையில் மாபெரும் பரிசுத்திட்டத்தை பிரிட்டன் இளவரசர் வில்லியம் அறிமுகப்படுத்தியுள்ளார். பிரிட்டன் இளவரசர் வில்லியம் அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு ஒருவர் வீதம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஒவ்வொருவர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு பல மில்லியன் பவுண்டுகள் பரிசாக அளிக்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. உலகம் எதிர்கொண்டு உள்ள மிகப்பெரிய சுற்றுச்சூழல் தொடர்பான சவால்களுக்கு குறைந்தபட்சம் 50 தீர்வுகளை காணும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,384.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.