Show all

சீரிய வாழ்மானம் அமைந்துள்ள, உலகின் முதல் பத்து நகரங்கள்!

அரசியல் நிலைத்தன்மை, குற்ற விழுக்காடுகள் மற்றும் சமூக நலங்கு, உள்கட்டமைப்பு, பசுமை திறந்த வெளி, உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 173 நகரங்களை பொருளாதாரப் புலனாய்வு அலகு வரிசைப்படுத்தியுள்ளது.

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பொருளாதாரப் புலனாய்வு அலகு (எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்) உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் நடப்பு ஆண்டு தரவரிசையை வெளியிட்டுள்ளது. 

அரசியல் நிலைத்தன்மை, குற்ற விழுக்காடுகள் மற்றும் சமூக நலங்கு, உள்கட்டமைப்பு, பசுமை திறந்த வெளி, உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 173 நகரங்களை இந்தப் புலனாய்வு அலகு வரிசைப்படுத்தியுள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் 10 உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் பட்டியலில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றன.

நடப்பு ஆண்டில் உலகெங்கிலும் உள்ள வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நகரங்கள்:-

வியன்னா, ஆஸ்திரியா
கோபன்ஹேகன், டென்மார்க்
சூரிச், சுவிட்சர்லாந்து
கால்கரி, கனடா
வான்கூவர், கனடா
ஜெனீவா, சுவிட்சர்லாந்து
பிராங்க்பர்ட், ஜெர்மனி
டொராண்டோ, கனடா
ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து

அதேவேளை, கீழ்கண்ட பத்து நகரங்கள் இந்த ஆய்வில் கடைசி பத்து இடங்களை பிடித்து இந்த நாட்டில் அரசியல் மாற்றம் கட்டாயத் தேவை என்பதை உணர்த்தியுள்ளன. அந்தப் பத்து நகரங்கள்:-

தெஹ்ரான், ஈரான்
டவுலா, கேமரூன்
ஹராரே, ஜிம்பாப்வே
டாக்கா, பங்களாதேஷ்
போர்ட் மோர்ஸ்பி
கராச்சி, பாகிஸ்தான்
அல்ஜியர்ஸ், அல்ஜீரியா
திரிபோலி, லிபியா
லாகோஸ், நைஜீரியா
டமாஸ்கஸ், சிரியா

173 நகரங்கள் ஆய்வுப் பட்டியலில் உள்ள நிலையில் பெங்களூரு 146 வது இடத்தைப் பிடித்து இந்தியாவிலேயே வாழத்தகுந்த சிறந்த நகரத்தின் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அடுத்து அகமதாபாத் 143ல் உள்ளது. சென்னை நகரம் 142ல் உள்ளது, நாமக்கான தலைகுனிவுத் தகவல் ஆகும். மும்பை 117வது இடத்திலும், டெல்லி 112வது இடத்திலும், உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,299. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.