Show all

போரைத் தவிர்ப்போம்! ஈராக்கில் இருந்த கனடா ராணுவப் படை குவைத்துக்கு மாற்றம்

ஈரான்- அமெரிக்க படைகளைக் குறிவைத்து ஈராக்கில் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது என்பதால், ஈராக்கில் இருந்த கனடா ராணுவப் படை குவைத்துக்கு மாற்றம் செய்யப்படுதாக தகவல் வெளியாகியுள்ளது.

25,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதால், அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமானப்படை தளங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது. இது மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சூழலில் ஈராக்கில் உள்ள கனடா ராணுவப் படையின் வீரர்கள் தற்காலிகமாக குவைத்துக்கு அனுப்பப்படுகின்றனர் என கனடாவின் ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேட்டோ அமைப்பின் திட்டப்படி எமது ராணுவ வீரர்களில் ஒரு பகுதியினர் தற்காலிகமாக குவைத் அனுப்பப்படுகிறார்கள். ராணுவ வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் கடமை. என கனடா ராணுவத்தின் தலைவர் ஜெனரல் ஜானத்தன் வேன்ஸ் செவ்வாய்க்கிழமை கூறினார். ஆனால், எத்தனை வீரர்கள் குவைத்துக்கு மாறுவார்கள் என அவர் தெரிவிக்கவில்லை.

ஈரான் அமெரிக்க படைகளைக் குறிவைத்து ஈராக்கில் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக ஜெர்மனி, ருமேனியா ஆகிய நாடுகளும் தங்கள் படையை ஈராக்கிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,392.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.