06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அபுகாசிய மொழி என்பது அபுகாசியர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி அபுகாசிய குடியரசின் ஆட்சி மொழியாக இருக்கிறது. இம்மொழி துருக்கி, சிரியா, ஈரான், ஈராக்கு, யோர்தான், உக்ரைன், உருசியா போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றேகால் இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி அபுகாசிய எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. அப்காசியா என்பது கோகேசியாவில் உள்ள ஒரு பகுதியாகும். இது பன்நாட்டு ஏற்பு கிட்டாத, ஏற்கப்படாத தன்னுரிமை குடியரசாகும். இது ஜோர்ஜியாவின் ஒரு அதிகாரபூர்வ பகுதியாக தன்னாட்சியுள்ள குடியரசு ஆகும். ரஷ்யா பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு இக்குடியரசை தனிநாடாக அங்கீகரித்து அறிவித்தது. அப்காசியாவின் நாணயம் ருஷ்யரூபிள். நாட்டின் மக்கள் அபுகாஸ் மக்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,344.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.